வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் | நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் அறிமுக விழா | பேனர் வைக்க விடாமல் தடுத்தது யார்? மனம் திறப்பாரா கேபிஒய் பாலா | புகழ் நடிக்கும் '4 இடியட்ஸ்' | பூ வச்சது குத்தமாய்யா : நவ்யா நாயருக்கு ரூ.1.14 லட்சம் அபராதம் | சினிமா நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் ஸ்ரீகாந்த் | ‛குட் பேட் அக்லி' படத்தில் இளையராஜா பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை | ரஜினி, கமல் பட இயக்குனர் யார்? இன்னும் தீராத சந்தேகம் |
மாளவிகா மோகனன் கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த பட்டம் போல படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் கன்னடம், இந்தி என பிற மொழி படங்களிலும் நடித்தார். தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் அறிமுகமானார். அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். இதுதவிர பாலிவுட்டில் உருவாகும் வெப் தொடரில் ஷாகித் கபூருக்கு ஜோடியாக நடிக்கிறார்.அவ்வப்போது கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தும் மாளவிகா மோகனன், அந்த படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் மாளவிகா மோகனன் கேரளாவில் பழங்குடியினத்தைச் சேர்ந்த சிறுவர்கள் கல்வி கற்பதற்காக புதிய முயற்சியை தொடங்கியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, இது 2015 ஆம் ஆண்டில் நான் முதன்முதலில் வயநாட்டில் உள்ள பழங்குடி மக்களைக் காணச் சென்றது முதல் எனது இதயத்திற்கு மிக நெருக்கமாக இருந்து வந்தது. அவர்கள் கல்வி கற்கவும், அவர்களுக்கு போதுமான அங்கீகாரம் கிடைக்கவும் நான் உதவ விரும்புகிறேன். அடிப்படை சுகாதார மற்றும் கல்வி வாய்ப்பு கூட இல்லாமல் வறுமையில் வாடும் இந்த சமூகத்தினருக்கு நான் உதவ விரும்பினேன்.
![]() |