'தனுஷ் 55' படத்தின் கதை பற்றி அப்டேட் தந்த இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி | அசத்துமா 'அஅ - அ' கூட்டணி? வெளியானது அறிவிப்பு | தமிழில் மற்ற மொழி நிறுவனங்களின் ஆதிக்கம் | வீட்டில் அமைதியாக பிறந்தநாளைக் கொண்டாடிய அல்லு அர்ஜுன் | தீபாவளி தினத்தில் சூர்யாவும், கார்த்தியும் நேரடியாக மோதிக் கொள்கிறார்களா? | 'விடாமுயற்சி'யை விட 'குட் பேட் அக்லி' குறைவான டிக்கெட் புக்கிங்! | நளினியுடன் இணைந்தது உண்மையா? நடிகர் ராமராஜன் விளக்கம் | குட் பேட் அக்லி - அனைத்து 'அக்லி' வார்த்தைகளையும் 'கட்' செய்த சென்சார் | ஜப்பானில் வெளியாகும் சிம்புவின் 'மாநாடு' | ஒரே படத்துடன் வெளியேற என் அம்மா தான் காரணம் ; மனம் திறந்த மம்முட்டி பட நடிகை |
திருமணத்திற்கு பிறகு மீனாவிற்கு மலையாள சினிமா தான் கைகொடுத்து வருகிறது. ஜீத்து ஜோசப் இயக்கிய திரிஷ்யம் படத்தில் மோகன்லாலுடன் நடித்தவர், அதன் இரண்டாவது பாகத்திலும் நடித்தார். அதேபோல் அதேபடத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் வெங்கடேசுக்கு ஜோடியாக இரண்டு பாகங்களிலும் நடித்தார் மீனா.
திரிஷ்யம் தமிழ் ரீமேக்கான பாபநாசம் படத்தின் இரண்டாம் பாகத்தில் கமலுக்கு ஜோடியாக மீனா நடிப்பார் என்று செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், மலையாளத்தில் மோகன்லாலை வைத்து லூசிபர் என்ற அரசியல் படத்தை இயக்கிய நடிகர் பிருத்விராஜ் அடுத்தபடியாக ப்ரோ டாடி என்றொரு படத்தை இயக்குகிறார். இந்தபடத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக மீனா நடிக்கிறார். காமெடி கதையில் உருவாகும் இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், முரளிகோபி என பலர் நடிப்பதாகவும் தெரிவித்திருக்கிறார் பிருத்விராஜ்.