கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் | மீரா ஜாஸ்மின் பெயர் என் காதுகளில் ஒலிக்காத நாளே இல்லை ; சிலாகித்த நயன்தாரா | கேரள முதல்வரின் சொந்த ஊர் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் | கிடப்பில் இருக்கும் பிரபுதேவா படத்தை வெளியிட முயற்சி |
திருவனந்தபுரம் : நடிகர்கள், இயக்குனர்கள், டாக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் என தன்னை பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த 14 பேர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார் நடிகை ரேவதி சம்பத்.
நடிகை, உளவியல் நிபுணர், சமூக ஆர்வலர் என பன்முக திறமையாளர் ரேவதி சம்பத். 2019ம் ஆண்டு பட்னாகர் என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து சில படங்களில் நடிக்கவும் செய்தார். இந்நிலையில் தனக்கு பாலியல் தொல்லை தந்தவர்களின் பட்டியலை சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், ‛‛இவர்கள் அனைவரும் என்னை பாலியல் ரீதியாக, உளவியல் ரீதியாக, உணர்வு ரீதியாக துன்புறுத்தியவர்கள் என குறிப்பிட்டு 14 பேரின் பெயரை வெளியிட்டுள்ளார். இவர் பட்டியலிட்டுள்ள நபர்களில் தனது திரைதுறையை சேர்ந்த நடிகர்கள், இயக்குனர்கள் மட்டுமல்லாது டாக்டர், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோரும் உள்ளனர்.
அவர்களின் விபரம் : ராஜேஷ் தொச்சிவர் (இயக்குனர்), சித்திக் (நடிகர்), ஆஷிக் மஹி (புகைப்படக்காரர்), சிஜூ (நடிகர்), அபில் தேவ் (கேரள பேஷன் லீக் நிறுவனர்), அஜய் பிரபாகர் (டாக்டர்), எம்.எஸ்.பாதுஷ் (துஷ்பிரயோகம் செய்தவர்), சவுரப் கிருஷ்ணன் (இணையதளத்தில் கேலி செய்தவர்), நந்து அசோகன் ( டி.ஒய்.எப்.ஐ யூனிட் கமிட்டி உறுப்பினர், நெடுங்கர்), மேக்ஸ்வெல் ஜோஸ் (குறும்பட இயக்குனர்), ஷானூப் கர்வத் மற்றும் சாக்கோஸ் கேக்குகள் (விளம்பர இயக்குனர்), ராகேந்த் பை (காஸ்ட் மீ பெர்பெக்ட், காஸ்டிங் டைரக்டர்), சாருன் லியோ (ஈஎஸ்ஏஎப் வங்கி ஏஜெண்ட், வலியத்துரா), பினு (சப் இன்ஸ்பெக்டர், பூந்துரா போலீஸ் நிலையம், திருவனந்தபுரம்)” என்று பட்டியலிட்டுள்ளார்.
விளம்பர நோக்கத்திற்காகவா அல்லது நிஜமாகவே பாதித்துள்ளாரா என்பதை விசாரித்தால் மட்டுமே அறிய முடியும். அதேசமயம் சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனே புகார் அளியுங்கள் என பலரும் அவரை அறிவுறுத்தி வருகின்றனர்.
ரேவதி சம்பத்தின் இப்பதிவு மலையாள திரையுலகில் புயலை கிளப்பியுள்ளது. இவர் ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு நடிகர் சித்திக் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.