மோசடி புகார் : நடிகை தன்யாவின் சொத்து முடக்கம் | பிளாஷ்பேக் : ஹீரோவாக நடித்த டெல்லி கணேஷ் | பிளாஷ்பேக் : தமிழகத்தில் பிறந்து இசையால் இந்தியாவை ஆண்ட வாணி ஜெயராம் | 'அமரன்' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு | கதையின் நாயகனாக சமுத்திரக்கனிக்கு அடுத்தடுத்து ரிலீஸ் | ரஜினியின் பிறந்தநாளில் 'டபுள்' அப்டேட்? | மாரி தொடரிலிருந்து வெளியேறுகிறாரா ஹீரோயின் ஆஷிகா படுகோன் | சைலண்டாக நிச்சயதார்த்தத்தை முடித்த தனுஷிக் | சீதாவின் தங்கையா இந்த வில்லி நடிகை | மீடியாவுக்கு குட்பை சொன்ன சுந்தரி நடிகை |
மலையாளத்தில் பிரபலமான மிமிக்ரி கலைஞர் சூரஜ். இவர் கிளப்கவுஸ் என்ற இணையதள பக்கம் ஒன்றை தொடங்கி, அதில் மலையாள முன்னணி நடிகர்கள் போன்று பேசி வந்தார். இதனால் இந்த பக்கத்தை பின் தொடர்கிறவர்கள் கணிசமாக அதிகரித்து வந்தார்கள்.
சமீபத்தில் இவர் பிருத்விராஜ் போன்று பேசி வெளியிட்ட ஆடியோ பரவலாக பரவியது. இது பிருத்விராஜின் கவனத்துக்கும் சென்றது. உடனடியாக பிருத்விராஜ் கிளப்கவுஸ் பக்கத்தை தனது டுவிட்டரில் வெளியிட்டு இதில் பேசியிருப்பது நானல்ல என தெரிவித்தார். எதிர்விளைவுகள் தெரியாமல் சூரஜ் செய்த இந்த காரியத்தை சுட்டிக்காட்டி பிருத்விராஜ் அவருக்கு பக்குவமாய் ஒரு பதிவிட்டார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: இது நீங்கள் விளையாட்டாக செய்தது என்று புரிகிறது. ஆனால், இதுபோன்ற விஷயங்களுக்கு தீவிரமான பின்விளைவுகளும் ஏற்படும் என்பதை புரிந்துகொள்ளுங்கள். நீங்கள் பேசுவதை நான் பேசுவதாக நினைத்து கேட்டிருக்கிறார்கள். போனில் எனக்கு நிறைய அழைப்புகளும், மெசேஜுகளும் உள்நாடு மற்றும் வெளிநாட்டில் இருந்து வந்ததால், உடனே இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
மிமிக்ரி அற்புதமான கலை. அதை தவறாகப் பயன்படுத்தாதீர்கள். மலையாளத்தில் இன்று உச்சத்தில் இருக்கும் பல கலைஞர்கள் மிமிக்ரி கலையில் இருந்து வளர்ந்து வந்தவர்கள்தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள். நீங்களும் கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறப் பாருங்கள். இணையதளத்தில் தவறாகப் பேசுபவர்களை நான் மன்னிக்க மாட்டேன். இத்துடன் நிறுத்துங்கள்.
இவ்வாறு பிருத்விராஜ் அந்த பதிவில் கூறியிருந்தார்.
இதை தொடர்ந்து சூரஜ் பிருத்விராஜிடம் மன்னிப்பு கேட்டதோடு அவரது குரலையும் நீக்கி விட்டார்.