மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா 2014ம் ஆண்டு முஸ்லிமாக மாறி ஷாப்ரூன் நிஸார் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அப்துல் காலிக் என்று தனது பெயரையும் மாற்றிக் கொண்டார். நிஸார் ஆடை வடிவமைப்பாளராக உள்ளார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார்.
நிஸார் யுவன் சங்கர் ராஜாவுடன் சில பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார். மற்றபடி அவர் மீடியா வெளிச்சத்துக்கு வந்ததில்லை. ஆனால், இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் சுறுசுறுப்பாக இயங்கி வந்தார்.
இந்நிலையில், முதன் முறையாக யுவன் குறித்து பேட்டி அளித்துள்ளார். இந்த பேட்டியை யுவன் நடத்தும் யு1 என்ற யு டியூப் சேனல் வெளியிட்டுள்ளது. அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:
‛‛என் குடும்பம். விளையாட்டாக ஏதாவது வாதிடும் போது கூட என் குடும்பத்தினர் யுவன் பக்கமே நிற்பார்கள். அவர்கள் தங்கள் வீட்டு மகனைப் போல அவரிடம் அவ்வளவு இயல்பாக இருப்பார்கள். என் குடும்பம் அவரது குடும்பம் போல இப்போது மாறிவிட்டது.
யுவனின் மனைவியாக இருப்பதால் எனக்கு நன்றாகப் பாடத் தெரியும், இசையைப் பற்றி நன்றாகத் தெரியும் என்று நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் அதில் உண்மையில்லை. உண்மை இதற்கு நேரதிரானது. ஆனாலும் அவர் உருவாக்கும் இசையை மற்றவர்கள் கேட்கும் முன்னால் நான் முதலில் கேட்டு அனுபவிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கிறது.
இந்த ஒட்டுமொத்த உலகத்தையும் நாம் பார்க்கும் ஜன்னல், நாம் தான். இந்தப் பழமொழி எனக்குப் பிடிக்கும். நமது ஜன்னல் அழுக்காக இருந்தால் நாம் பார்க்கும் உலகமும் அழுக்காகத் தான் இருக்கும் என்பது தான் என் எண்ணம்.
தோற்றத்தை மட்டும் வைத்து ஒரு விஷயத்தை தீர்மானிப்பது எனக்கு உடன்பாடில்லாத விஷயம். என் பெயர் ஸப்ரூன் நிஸார் என்பதை மனதில் கொண்டு நான் உருது, அல்லது இந்தி போன்ற மொழிகளை பேசுவேன் என்று மக்கள் நினைப்பார்கள். உண்மை என்னவென்றால் நான் ஒரு தமிழச்சி. தமிழ் என் தாய் மொழி.
யுவனை தானே நீங்க ட்ரக்ன்னு சொல்றீங்க, ஆமா வீட்லேயே 70 கிலோ போதை மருந்து வச்சிருக்கேன். எங்க போனாலும், என்னோட ட்ரக், விட்டமின்ஸ், நியூட்ரியண்ட்ஸ் எல்லாத்தையும் கூடவே எடுத்துட்டு போறேன்” என்று கூறியிருக்கிறார்.