'3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி |
தமிழ் சினிமாவில் இன்றைய நகைச்சுவை நடிகர்களின் முன்னோடி என்று சொன்னால் அது கவுண்டமணி மட்டுமே. 80, 90, 2கே காலங்களில் அவருடைய நகைச்சுவை என்றாலே தனி சுவாரசியம் தான்.
யாருடன் சேர்ந்து நடித்தாலும் அவரைப் பற்றி அதிகம் பேச வைத்துவிடுவார். அவருடைய கிண்டல், கேலி, கமெண்ட் நகைச்சுவையைத்தான் அவருக்குப் பின் பல நகைச்சுவை நடிகர்கள் பாலோ செய்து வருகிறார்கள்.
இன்று தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார் கவுண்டமணி. அவருடன் தொலைபேசியில் பேசியதைப் பற்றி இயக்குனர் சுப்பிரமணிய சிவா அவருடைய பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். அதில்,
நகைச்சுவை மாமன்னன் அண்ணன் கவுண்டமணி அவர்களுக்கு இன்று பிறந்தநாள். அண்ணனிடம் போனில் பேசினேன் 3 விஷயம் சொன்னார்.
1) சிவா உடனே கொரானா தடுப்பூசி போட்டுக்க.. நான் போட்டுகிட்டேன் என்றார். என் அம்மாவிடம் போனை கொடுத்தேன், அம்மா நீங்களும் சிவாவும் உடனே தடுப்பூசி போட்டுக்குங்கனு சொன்னார்.
2) தனுஷ் ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார் அவருக்கு வாழ்த்துக்கள்.
3) எனக்கும் முக்கியம் தரக்கூடிய நல்ல கதை வந்தால் உடனே நடிக்க ஒத்துகுவேன்பா.
அதே கம்பீரம் அண்ணனின் குரலில், விரைவில் அண்ணனை மிக பெரிய நட்சத்திரத்துடன் திரையில் சந்திக்க போகிறோம்..
இறைவனின் திருவருளோடு பல்லாண்டு பல்லாண்டு நலமோடு வாழ்க..” என பதிவிட்டுள்ளார் சிவா.
கவுண்டமணி அடுத்து நடிக்கும் படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வரலாம் எனத் தெரிகிறது. சில வருடங்களுக்கு முன்பு வெளிவந்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற ஒரு படத்தின் இரண்டாவது பாகத்தில் அவர் ரீ-என்ட்ரி கொடுக்கலாம் எனச் சொல்கிறார்கள்.