12 ஆயிரம் தியேட்டர்களில் 'புஷ்பா 2' ரிலீஸ் | சீன உளவாளியாக எஸ்.ஜே.சூர்யா | சீனாவில் 'மகாராஜா' முதல் நாள் வசூல் | நிர்வாணமாக நடித்தது ஏன் : திவ்யா பிரபா விளக்கம் | 'மஞ்சுமல் பாய்ஸ்' பட லாபம் மறைப்பு : நடிகர் சவுபின் சாஹிர் அலுவலகத்தில் ஐடி ரெய்டு | மோசடி புகார் : நடிகை தன்யாவின் சொத்து முடக்கம் | பிளாஷ்பேக் : ஹீரோவாக நடித்த டெல்லி கணேஷ் | பிளாஷ்பேக் : தமிழகத்தில் பிறந்து இசையால் இந்தியாவை ஆண்ட வாணி ஜெயராம் | 'அமரன்' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு | கதையின் நாயகனாக சமுத்திரக்கனிக்கு அடுத்தடுத்து ரிலீஸ் |
கொரோனா பரவல் காரணமாக தமிழ்நாட்டில் நாளை முதல் தியேட்டர்களை முழுவதுமாக மூட உள்ளார்கள். இன்று முதல் ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு என்பதால் இன்றிலிருந்தே தியேட்டர்களை மூடிவிட்டார்கள். அரசு அறிவித்தபடி ஏப்ரல் 30ம் தேதி வரை இந்நிலை நீடிக்குமா அல்லது அதற்கு மேலும் தொடருமா என்பது கொரானோ பரவலைப் பொறுத்தே அமையும்.
கடந்த வருடம் கொரோனா பரவிய போது தியேட்டர்களை மூடிய காரணத்தால், ஓடிடி தளங்களில் புதிய படங்களை நேரடியாக வெளியிட ஆரம்பித்து பல படங்களை வெளியிட்டார்கள். அது போல இந்த வருடமும் நடக்கலாம் என்ற பேச்சு ஏற்கெனவே எழுந்துவிட்டது.
விஜய் சேதுபதி நடித்துள்ள 'துக்ளக் தர்பார்', த்ரிஷா நடித்துள்ள 'ராங்கி' ஆகிய படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. நயன்தாரா நடித்துள்ள 'நெற்றிக்கண்' படம் கூட ஓடிடி தளத்தில் வெளியாகலாம் என புதிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.
கடந்த வருட தீபாவளிக்கு நயன்தாரா நடித்த 'மூக்குத்தி அம்மன்' படம் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் காரணமாகவே 'நெற்றிக்கண்' படத்தை வெளியிட ஓடிடி தளங்கள் நல்ல விலை கொடுக்கத் தயாராக இருக்கிறார்களாம்.
மே மாதத்திலும் தியேட்டர்கள் மூடப்படும் நிலை வந்தால் மேலும் பல புதிய படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகவே வாய்ப்புள்ளது என்கிறார்கள்.