ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் ஹீரோவான சிரஞ்சீவி, கடந்த வருடம் கொரோனா தொற்று பரவிய போதே திரையுலகத்தைச் சார்ந்தவர்களுக்கு பல நலத்திட்ட உதவிகள் கிடைத்திட தெலுங்குத் திரையுலகத்தினரை இணைத்து செயலாற்றினார்.
கொரோனா நெருக்கடி தொண்டு அமைப்பு என்ற ஒன்றை ஆரம்பித்து அதன் மூலம் உதவிகளைச் செய்ய முன்னெடுத்தார். அதன் மூலம் திரையுலகத்தினரைச் சேர்ந்த பலருக்கு தேவையான நலத்திட்ட உதவிகள் கடந்த வருடம் வழங்கப்பட்டது.
தற்போது கொரோனா தடுப்பூசி போடுவதற்காக திரையுலகத்தைச் சேர்ந்த 45 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் அப்போலோ மருத்துவமனையுடன் இணைந்து இன்று முதல் ஒரு மாத காலத்திற்கு கொரானோ தடுப்பூசியை இலவசமாகப் போடுவதற்கு ஏற்பாடு செய்துள்ளார்.
சிரஞ்சீவியின் இந்த முயற்சிக்கு தெலங்கானா மாநில கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் பாராட்டு தெரிவித்துள்ளார். “இந்த நெருக்கடியான கொரோனா பரவல் நேரத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி 45 வயதிற்கு மேற்பட்ட திரையுலகத்தினருக்கும் பத்திரிகையாளர்களுக்கும் இலவச தடுப்பூசி போடுவதாக அறிவித்துள்ளார். இந்த சமூகத்திற்காக அவர் செய்யும் முயற்சிகளுக்கு பாராட்டுக்கள்,” என்றும் குறிப்பிட்டுள்ளார்.