அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் மறைந்து இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் அரசியலிலும், சினிமாவிலும் அவரது தாக்கம் இருந்து கொண்டே தான் இருக்கிறது. இந்த தேர்தலிலும் அவர் பெயர் தான் அதிகமாக உச்சரிக்கப்படுகிறது. சினிமாவில் எம்.ஜி.ஆர் படங்களை டிஜிட்டலில் வெளியிட்டால் அதற்கும் வரவேற்பு கிடைக்கிறது.
இப்போது உழைக்கும் கைகள் என்ற படம் எம்.ஜி.ஆர் பாணியில் உருவாகிறது. எம்.ஜி.ஆர் உழைக்கும் கரங்கள் என்ற படத்தில் விவசாயியாக நடித்தார். அதே பெயரை மீண்டும் பயன்படுத்த முடியாது என்பதால் அதே விவசாயிகள் பிரச்சினையை மையமாக கொண்டு உழைக்கும் கைகள் உருவாகிறது. இந்த படத்தில் எம்.ஜி.ஆர் வேடமிட்டு மேடைகளில் ஆடும் நாமக்கல் எம்.ஜி.ஆர் என்பவர் நடிக்கிறார். கதாநாயகியாக கிரண்மயி மற்றும் டைரக்டர் செந்தில்நாதன், ஜாகுவார் தங்கம், தமிழ்நாடு மேடை கலைஞர்கள் சங்க தலைவர் பிரேம்நாத் ஆகியோர் நடித்துள்ளனர்.
படம் பற்றி நாமக்கல் எம்.ஜி.ஆர் கூறியதாவது: உணவு வழங்கும் மண்ணின் மைந்தர்களான விவசாயிகள் பற்றிய கருத்துகளை, விவசாயி, உழைக்கும் கரங்கள், உரிமை குரல் படங்களில் சொன்னவர் எம்.ஜி.ஆர். அவருக்குப்பின், அவரளவுக்கு விவசாயிகளின் பிரச்சினைகளை யாரும் முழுமையாக திரைப்படத்தில் சொன்னதில்லை.
இந்த குறையை போக்கும் வகையில், 'உழைக்கும் கைகள்' என்ற படத்தை உருவாக்கி இருக்கிறோம். எம்.ஜி.ஆர் இன்று உயிரோடு இருந்திருந்தால் விவசாயிகள் பிரச்சினைகளை எப்படி கையாண்டிருப்பார் என்பது தான் படத்தின் கதை. தென்காசி, குற்றாலம், நாமக்கல், ஆண்டிப்பட்டி, போடிநாயக்கனூர் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தி உள்ளோம். என்றார்.