சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
அஜய் ஞானமுத்து டைரக்சனில் விக்ரம் நடித்து வரும் படம் 'கோப்ரா'. இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில், வளர்ந்து வரும் இளம் மலையாள நடிகரான ரோஷன் மேத்யூ என்பவர் நடித்து வருகிறார். இவரது பிறந்தநாளான இன்று அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து அவருக்கென ஸ்பெஷலாக ஒரு போஸ்டரையும் இன்று வெளியிட்டுள்ளனர்.
பிரித்விராஜ் நடிப்பில் மலையாளத்தில் வெளியான 'கூடே' என்கிற படத்தில் நஸ்ரியாவின் காதலராக நடித்த இவர், நிவின்பாலியுடன் இணைந்து நடித்த 'மூத்தோன்' படத்தில் ஓரினச்சேர்க்கையாளராக நடித்து அதிரவைத்தார். அந்தப்படத்தை பார்த்துவிட்டு பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப்,. தான் இந்தியில் இயக்கிய 'சோக்ட்' என்கிற படத்திலும் இவருக்கு ஒரு முக்கியமான கதாபாத்திரத்தை கொடுத்தார். அதையடுத்து தான், இவருக்கு கோப்ரா வாய்ப்பு தேடிவந்தது.
கோப்ரா படத்தில் முதலில் இந்த கேரக்டரில் மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் என்பவர் தான் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால் அவர் மலையாளத்தில் தயாரிப்பாளர் ஒருவருடன் மோதல் போக்கை கடைபிடித்து, ரெட்கார்டு போடும் அளவுக்கு பிரச்சனை பெரிதானதால், அவரை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக கோப்ரா இவரை இழுத்துக்கொண்டது இங்கே குறிப்பிடத்தக்கது..