மோசடி புகார் : நடிகை தன்யாவின் சொத்து முடக்கம் | பிளாஷ்பேக் : ஹீரோவாக நடித்த டெல்லி கணேஷ் | பிளாஷ்பேக் : தமிழகத்தில் பிறந்து இசையால் இந்தியாவை ஆண்ட வாணி ஜெயராம் | 'அமரன்' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு | கதையின் நாயகனாக சமுத்திரக்கனிக்கு அடுத்தடுத்து ரிலீஸ் | ரஜினியின் பிறந்தநாளில் 'டபுள்' அப்டேட்? | மாரி தொடரிலிருந்து வெளியேறுகிறாரா ஹீரோயின் ஆஷிகா படுகோன் | சைலண்டாக நிச்சயதார்த்தத்தை முடித்த தனுஷிக் | சீதாவின் தங்கையா இந்த வில்லி நடிகை | மீடியாவுக்கு குட்பை சொன்ன சுந்தரி நடிகை |
பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் அவரது 46வது படம் குறித்த அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இதன் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் படப்பிடிப்பு நடந்தபோது அதனை காண ஏராளமானோர் குவிந்தனர். மீண்டும் கொரோனா பரவி வருவதால் கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கின்றனர். கொரோனா விதிகளை கடைபிடிக்காமல் படிப்பிடிப்பு நடத்திய சினிமா குழுவினருக்கு மாநகராட்சி அதிகாரிகள் ரூ.5000 அபராதம் விதித்தனர்.
இந்நிலையில் நேற்று பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் படப்பிடிப்பு நடந்ததாக கூறப்படுகிறது. இதை அங்கிருந்த பத்திரிக்கையாளர் ஒருவர் போட்டோ எடுக்க முயன்றார். அவரை அங்கிருந்த படப்பிடிப்பு பாதுகாவலர்கள் தடுத்தனர். இதில் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. பத்திரிக்கையாளரை மிரட்டல் விடுக்கும் வகையில் பாதுகாவலர்கள் பேசி உள்ளனர். இதை கண்டித்து அந்த பகுதியை சேர்ந்த பத்திரிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு சிறிது பதட்டமான சூழல் உருவானது. பின்னர் அவர்களை நடிகர் விஜய் சேதுபதி சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். இதனால் படப்பிடிப்பு தடைப்பட்டது. மேலும் மிரட்டல் விடுத்த நபர்களை போலீசார் காவலம் நிலையம் அழைத்து விசாரித்தனர்.