'மகுடம்' இயக்குனர் நீக்கம் : விஷால் செய்தது நியாயமா ? | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா | பிளாஷ்பேக் : சென்டிமெண்டில் அமலாவை கவிழ்த்த டி.ராஜேந்தர் | பிளாஷ்பேக்: 2 ஹீரோயின்கள் மோதிய 'மாங்கல்யம்' | சுற்றுலாவில் கீர்த்தி சுரேஷின் தலை தீபாவளி | காதலருடன் தீபாவளி கொண்டாடிய சமந்தா |
மராட்டிய சினிமாவில் இருந்து பாலிவுட்டுக்கு வந்தவர் மிருனாள் தாக்கூர். சூப்பர் 30, பாட்டியா ஹவுஸ், கோஸ்ட் ஸ்டோரீஸ், உள்பட பல படங்களில் நடித்துள்ளர். ஜெர்சி, தோபான் படங்களில் நடித்து வருகிறார். இடையிடையில் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்தார். சமீபத்தில் இவர் நடித்த பாகுபலி பிபோர் தி பிக்னிங் வெப் சீரிஸ் வெளிவந்துள்ளது.
இந்த நிலையில் முதன் முறையாக தமிழ் தெலுங்கு மொழிகளில் தயாராகும் படத்தில் நடிக்க இருக்கிறார். படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. இதனை அந்தாள ராட்சஷி, லீ, கிருஷ்ண காதி வீர பிரேம கதா படங்களை இயக்கிய ஹனு ராகவபுடி இயக்குகிறார். விஷால் சந்திரசேகர் இசை அமைக்கிறார்.
படத்திற்கு யுத்தம் தோ ரசினா பிரேம கதா என்று தலைப்பு வைக்கப்படலாம் என்று தெரிகிறது. இதில் மிருனாள் தாக்கூர், துல்கர் சல்மான் ஜோடியாக நடிக்கிறார். ராணுவ அதிகாரியாக துல்கர் நடிக்கிறார். 1964ம் ஆண்டு வாக்கில் நடக்கும் பீரியட் கதை.