ஆமீர்கான் விரைவில் மூன்றாவது திருமணம்? | வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு | 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கப்பட்ட 'தண்டேல்' | பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' | துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை |
கன்னட படங்கள் ஒரு குறுகிய வியாபார எல்லையிலே சுற்றிவந்த நிலையில் கேஜிஎப் படம் மூலம் அதனை விரிவுபடுத்தியவர் இயக்குனர் பிரசாந்த் நீல். அந்தப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, கேஜிஎப்-2ஆம் பாகத்தையும் இயக்கி முடித்துவிட்டு, தற்போது பிரபாஸ் நடிப்பில் சலார் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த இரண்டு ஹீரோக்களுக்காக அவர் உருவாக்கிய கதையில் மிகப்பெரிய சுவாரஸ்யமான விஷயம் அடங்கி இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
அதாவது கேஜிஎப் படத்தின் கதையை அவர் எழுதியதே பிரபாஸுக்காகத்தானாம். ஆனால் பாகுபலி படத்தின் வெற்றியால் பிரபாஸை, அவரால் எளிதில் நெருங்க முடியவில்லை. அந்தசமயத்தில் தான், நடிகர் யஷ், இந்தப்படத்தின் கதையை கேட்டு, தான் நடிக்க விரும்புவதாக முன்வந்துள்ளார். அப்படித்தான் கேஜிஎப் படம் உருவானது. அந்தப்படம் வெற்றி பெற்றதும் அந்த சமயத்தில் யஷ்ஷை வைத்தே, அடுத்த படம் இயக்கலாம் என பிரசாந்த் நீல் உருவாக்கிய கதை தான் சலார்..
ஆனால் கேஜிஎப் படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் வேலைகள் ஆரம்பித்து விட்டதால், அதிலும் யஷ் தான் ஹீரோவாக நடித்தாக வேண்டிய சூழல் உருவானது. இந்தநிலையில் தான், கேஜிஎப் கொடுத்த வெற்றி மூலம், பிரபாஸை சந்திக்கும் வாய்ப்பு, பிரசாந்த் நீலுக்கு எளிதாக கிடைத்தது. அவரிடம் சலார் படத்தின் கதையை சொன்னபோது, உடனே ஒப்புக்கொண்டாராம். இருந்தாலும் யஷ்ஷை மனதில் வைத்து எழுதிய கதை என்பதால், பிரபாஸின் மாஸுக்கு ஏற்ற மாதிரி சில திருத்தங்கள் செய்து, தற்போது அந்த படத்தை இயக்கியும் வருகிறார் பிரசாந்த் நீல்.