ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
மலையாளத்தில் வெற்றி பெற்ற ஹெலன் படம் தமிழில் அன்பிற்கினியாள் என்ற பெயரில் ரீ-மேக் ஆகி உள்ளது. நடிகர் அருண்பாண்டியன் நடித்து, தயாரிக்க, அவரது மகள் கீர்த்தி பாண்டியன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். கோகுல் இயக்கி உள்ளார். இப்படம் மார்ச் 5ல் திரைக்கு வருகிறது.
பத்திரிக்கையாளர்களிடம் அருண் பாண்டியன் பேசியதாவது : "அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கம். அன்பிற்கினியாள் படம் உங்களுக்குப் பிடித்திருக்கும் என உறுதியாக நம்புகிறேன். இந்தப்படத்தை நாங்கள் சீக்கிரமாகவே முடித்துவிட்டோம். கொரோனா காரணமாக ரிலீஸ் பண்ண தாமதம். நான் 18 ஆண்டுகளுக்குப் பின் இந்தப்படத்தில் நடித்துள்ளேன். என் மகளோடு நடித்தது நல்ல அனுபவம். எனக்குள் ஒரு நடிகன் இருக்கிறான் என்ற நம்பிக்கையை இந்தப்படம் ஏற்படுத்தியுள்ளது. இந்தப்படத்திற்கு உயிர் கொடுத்தவர் மியூசிக் டைரக்டர் ஜாவித். மிக சிறப்பாக உழைத்துள்ளார். இந்தப்படத்தில் வாழ்ந்தது போன்ற ஓர் உணர்வு. இந்தப்படத்தின் கேரக்டர் போல கிடைத்தால் தொடர்ந்து நிச்சயமாக நடிப்பேன். ஒரு நல்லபடத்தை எடுத்துள்ளோம். படத்திற்கு மக்கள் அனைவரும் ஆதரவு தரவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.
இயக்குநர் கோகுல் பேசியதாவது : "இந்தப்படம் எனக்கு ஒரு புது ஜானராக இருக்கும் என நினைத்து செய்தேன். அருண்பாண்டியன், இந்தப்படத்தின் மலையாள வெர்சனை காண்பித்து டயலாக் எழுதச் சொன்னார். படம் பார்த்து முடித்ததும் எனக்கு பிடித்துப்போனதால் அவரிடம் படத்தை நானே செய்கிறேன் என்று வாய்ப்பைக் கேட்டுப் பெற்றுக் கொண்டேன். கீர்த்தி பாண்டியன் இந்தப்படத்தில் சிறப்பாக நடித்துள்ளார். அவரின் நடிப்பு இந்தப்படத்தைத் தூக்கிப்பிடித்திருக்கிறது'' என்றார்.