'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
நடிகர் டாக்டர் ராஜசேகரும், நடிகை ஜீவிதாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இந்த தம்பதிகளுக்கு ஷிவானி, ஷிவாத்மிகா என்ற இரு மகள்கள் இருக்கிறார்கள். இவர்களில் ஷிவானி தற்போது படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது ஷிவாத்மிகாவும் சினிமாவில் அறிமுகமாகிறார். இன்னும் டைட்டில் வைக்கப்படாத தமிழ் படத்தில் கவுதம் கார்த்திக் ஜோடியாக நடிக்கிறார். இவர்களுடன் சேரன், டேனியல் பாலாஜி , சரவணன், கிழக்கு சீமையிலே விக்னேஷ் , சிங்கம் புலி, ஜோமல்லூரி , கவிஞர் சினேகன் , நமோ நாராயணன், சௌந்தர்ராஜன் , விஜய் டிவி ஜாக்குலின் , மௌனிகா, மைனா , பருத்திவீரன் சுஜாதா , ஜானகி , பிரியங்கா உள்பட பலர் நடிக்கிறார்கள்.
இந்த திரைப்படத்தை நந்தா பெரியசாமி எழுதி, இயக்க, பாலபரணி ஒளிப்பதிவு செய்கிறார். சித்துகுமார் இசையமைக்கிறார். ஸ்ரீ வாரி பிலிம்ஸ் சார்பில் ரங்கநாதன் தயாரிக்கிறார். வரும் மார்ச் மாதம் முதல் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது .