சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
சுந்தர்.சி இயக்கத்தில் காமெடி கலந்த ஹாரர் படமாகி வெளியாகி வெற்றி பெற்ற படம் அரண்மனை. அதன்பின் அரண்மனை-2 என இரண்டாம் பாகமும் வெளியாகி ஹிட்டானது. இந்தநிலையில் இந்த படத்தின் மூன்றாவது பாகம் தற்போது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. சுந்தர்.சி, ஆர்யா, ஆண்ட்ரியா, ராஷி கண்ணா, யோகிபாபு ஆகியோருடன் முக்கிய வேடத்தில் பிக்பாஸ் புகழ் சாக்ஷி அகர்வாலும் நடித்துள்ளார்..
காலா, விஸ்வாசம் படங்களில் நடித்த சாக்ஷி அகர்வால், கடந்த வருடம்(2019) பிக்பாஸ் சீசன்-3யில் கலந்துகொண்டார். அதன்பிறகு நான்கைந்து பட வாய்ப்புகள் அவரை தேடிவந்தன. அதில் அரண்மனை-3 அவருக்கு முக்கியமான படம் என்று சொல்லலாம்.. தற்போது இந்தப்படத்தில் நடித்து முடித்துவிட்ட சாக்ஷி அகர்வால் தனக்கான வசனங்களை தானே டப்பிங் பேசியுள்ளார். இதுகுறித்த புகைப்படங்களையும் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.