ஷாருக்கானை தொடர்ந்து சல்மான்கானுக்கு ஜோடியாகும் நயன்தாரா | ஹன்சிகா - சோஹைல் விவாகரத்து: 4 ஆண்டுகளில் முடிவுக்கு வந்த திருமண வாழ்க்கை | லாபத்தில் பங்காக சம்பளம் : ராதிகா பெருமிதம் | விஜயும் யோசித்திருப்பார்.. திரிஷாவுக்கு வாழ்த்துகள்..: பார்த்திபன் 2வது வீடியோ | மேக்கப் போடுவதில் எனக்கு ஆர்வம் கிடையாது : சாரா அர்ஜுன் | நடிகை பாலியல் வழக்கு : கேரளா அரசு மேல்முறையீடுக்கு திலீப் உள்ளிட்ட நால்வருக்கு நோட்டீஸ் | நயன்தாரா, கவின் நடிக்கும் ஹாய் படத்தின் போஸ்டர் வெளியானது | என் அப்பா நினைவுக்கு வந்தார் : தாய் கிழவி வெற்றி விழாவில் கண் கலங்கிய சிவகார்த்திகேயன் | 7ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது! | ரிலீஸாகி எட்டு மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் சித்தாரே ஜமீன் பர் |

நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியை பிரிந்து வாழ்கிறார். இருவரும் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். தற்போது ரவி, பாடகி கெனிஷா உடன் நெருக்கமாக உள்ளார். தனியாக தயாரிப்பு நிறுவனம் துவங்கி படங்கள் தயாரித்து வருவதோடு யோகிபாபுவை ஹீரோவாக வைத்து ஆன் ஆர்டினரி மேன் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
மனைவி ஆர்த்தி பிரிந்ததை வைத்து ஏற்கனவே அவர் மீது சில விமர்சனங்கள் வலைதளங்களில் வந்தன. சமயங்களில் அமைதியாகவும் ஒரு சில நேரங்களில் பதிலும் அளித்தார் ரவி. இந்நிலையில் மீண்டும் அதுபோன்று விமர்சனங்கள் வந்துள்ளது. இதனால் இன்ஸ்டாவில் ‛ஆசை அன்பினில்....' என்ற பாடலை வெளியிட்டு ஒரு பதிவை போட்டுள்ளார் ரவி.
அதில் ‛‛நான் அமைதியாக என் வாழ்க்கையை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன்'' என குறிப்பிட்டு.... ‛‛பெண்கள்தான் எப்போதும் சரி என்று நீங்கள் அனைவரும் கருதுவதால், நீங்கள் சொல்ல விரும்புவதையெல்லாம் மீண்டும் சொல்லிக் கொள்ளுங்கள். ஆண்களே பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள். நமது நீதித்துறைகூட இந்த உண்மையை உணர்ந்துள்ளது. ஒரு நாள், என் மனதைப் பற்றியும், நான் நேசிக்கும் மக்களுக்காக நான் செய்த தியாகங்களைப் பற்றியும் நீங்கள் அனைவரும் புரிந்து கொள்வீர்கள். தயவுசெய்து ஒரு ஆணை நிம்மதியாக வாழ விடுங்கள்; உங்கள் இழிவான எண்ணங்களை உங்களிடமே வைத்துக் கொள்ளுங்கள். நான் மீண்டும் என் பாதையில் பயணிக்கச் செல்கிறேன்'' என பதிவிட்டுள்ளார்.
ரவி மோகனின் இந்த பதிவு வைரலாகி வருகிறது.




