ரஜினி, கமல் இணையும் படம்: லதா ரஜினிகாந்த் சொன்ன தகவல் | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் 'கார்மேனி செல்வம்' புதிய ரிலீஸ் தேதி | மீண்டும் சிரஞ்சீவி படத்திற்கு இசையமைக்கும் தமன்! | என் போட்டோவை மார்பிங் செய்கின்றனர்!: ரச்சிதா ஆதங்கம் | ரொமான்டிக் திரில்லர் கதையில் உருவாகும் 'ஆசை' | 'கேம் ஆப் த்ரோன்ஸ்' புதிய தொடர் வெளியானது: உலகம் முழுக்க வரவேற்பு | 'மாஸ்டர் பிளான்' படத்தில் பொலிட்டிக்கல் பிளாக் காமெடி | வில்லனாக நடிக்க விரும்பும் முனீஷ்காந்த் | பிளாஷ்பேக்: 'நிழல்கள்' ராதுவை தெரியுமா? | பிளாஷ்பேக்: ஒரே படத்தில் 3 பேருக்கு வாழ்வளித்த கண்ணதாசன் |

ஒவ்வொரு வருடமும் காதலர் தினத்தை முன்னிட்டு ஏதாவது ஒரு காதல் படம் வெளியாகும். சில வருடங்களில் அது கூட நடக்காது. ஆனால், இந்த 2026ம் வருட காதலர் தினத்தில் புதிய காதல் படங்கள் வருகிறதோ இல்லையோ, பழைய காதல் படங்களை வெளியிட உள்ளார்கள்.
கதிர் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையில், குணால், சோனாலி பிந்த்ரே, கவுண்டமணி மற்றும் பலர் நடிப்பில் 1999ல் வெளியான படம் 'காதலர் தினம்'.
கவுதம் மேனன் இயக்குனராக அறிமுகமாக, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பாளராக அறிமுகமாக மாதவன், அப்பாஸ், ரீமா சென், விவேக் மற்றும் பலர் நடிப்பில் 2001ல் வெளியான படம் 'மின்னலே'.
அமீர் இயக்குனராக அறிமுகமாக, யுவன் ஷங்கர் ராஜா இசையில், சூர்யா, கதாநாயகியாக த்ரிஷா அறிமுகமாக 2002ல் வெளிவந்த படம் 'மௌனம் பேசியதே'.
டி ராஜேந்தர் இயக்கி, இசையமைத்து, ஒரு கதாபாத்திரத்தில் நடிகராக அறிமுகமாக, கங்கா, நளினி, சரிதா, ராதாரவி மற்றும் பலர் நடிப்பில் 1983ல் வெளிவந்த படம் 'உயிருள்ளவரை உஷா'.
இந்த நான்கு படங்களில் 'காதலர் தினம்' படம் மட்டும் பிப்ரவரி 14ல் வெளியாக, மற்ற மூன்று படங்கள் பிப்ரவரி 13ல் வெளியாகிறது.
60ஸ், 70ஸ், 80ஸ், 90ஸ் கிட்ஸ் என அவரவர் இளமைப் பருவத்தில் பார்த்து ரசித்த காதல் படங்களை இந்த வாரம் பார்த்து ரசிக்கலாம். இதற்கு முன்பு இப்படி ஒரு காதலர் தின ரீரிலீஸ் படங்கள் வந்ததில்லை.




