ரோபோ சங்கர் இறுதி சடங்கு : உருக்கமாக பேசிய விமல் | நடிகை பலாத்கார வழக்கு : திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு மேல்முறையீடு | பிளாஷ்பேக்: ஆஸ்தான இயக்குனருக்காக கவுரவ தோற்றத்தில் நடித்த சிவாஜி | அரசியல் படத்தில் அபர்ணதி | ஒரே நேரத்தில் தயாராகும் 2 ஐயப்பன் படங்கள் | 'கேரளா ஸ்டோரி 2' படத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் | இந்த வார ஓடிடியில் வரிசைக்கட்டும் க்ரைம் த்ரில்லர் படங்கள்....! | நானி படத்தில் இணைந்த பிரித்விராஜ் | ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் ‛டெக்ஸ்லா' : யுவன் இசை | நடிகையுடன் உறவு: விவாகரத்து கேட்டு நடிகர் விஜய் மனைவி சங்கீதா மனு |

கடந்த 2023ம் ஆண்டில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் என்ற படத்தை இயக்கினார் அட்லி. இந்த படம் 1100 கோடி வசூலித்தது. ஆக்ஷன் கதையில் உருவான இந்த படம் ஷாருக்கானுக்கு முதல் தேசிய விருதை பெற்றுக் கொடுத்தது. இந்த நிலையில் அடுத்தபடியாக ஜவான் படத்தின் இரண்டாம் பாகத்தை ஷாருக்கானை வைத்து மீண்டும் அட்லி இயக்கப்போவதாக பாலிவுட்டில் செய்திகள் வெளியாகி வந்தன.
இது குறித்து அட்லியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் ஷாருக்கான் நடிப்பில் ஒரு படம் இயக்கப் போகிறேன். ஆனால் அது ஜவான் 2 அல்ல, வேறு படம். அதோடு ஷாருக்கான் நடிப்பில் டான் படத்தின் மூன்றாம் பாகத்தை நான் இயக்குவதாக ஊடகங்களில் ஒரு செய்தி வெளியாகி வருகிறது. அது உண்மை இல்லை என்றும் தெரிவித்துள்ளார் அட்லி.
தற்போது அல்லு அர்ஜுன் நடிக்கும் 22வது படத்தை இயக்கி வருகிறார் அட்லி. இந்த படத்தில் தீபிகா படுகோனே நாயகியாக நடிக்கிறார்.