பாரத், சான்வீயின் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது | சிரஞ்சீவி படத்தில் நடிக்க இளம் நடிகைகளிடம் பேச்சுவார்த்தை | இம்மார்ட்டல் படம் குறித்து பகிர்ந்த இயக்குனர் | 'கர' படத்தில் வில்லத்தனம் கலந்த தனுஷ் | பராசக்தி படத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்க வேண்டியது : சுதா | சுந்தர் சி, விஷால் படத்திற்கு ‛புருஷன்' என தலைப்பு | ரூ. 31 கோடி வசூலைக் கடந்த சிறை : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | சிறிய நடிகருக்கு சம்பள பாக்கியை வைத்த ‛ஒய் நாட் ஸ்டுடியோஸ்' | சாய் பல்லவியைப் பாராட்டிய அமீர்கான் | ‛காந்தாரா' நாயகி சப்தமி கவுடாவின் படம் தமிழிலும் ரிலீஸாகிறது |

பிரதீப் ரங்கநாதன் அடுத்து இயக்கி, ஹீரோவாக நடிக்கும் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இதில் மீனாட்சி சவுத்ரி, ஸ்ரீலீலா ஆகியோர் ஹீரோயினாக நடிக்க உள்ளனர்.
பொதுவாக, பிரதீப் ரங்கநாதன் படங்களில் நடிக்கும் ஹீரோயின்கள் கமர்ஷியலாக வெற்றி பெறுகிறார்கள். அவர்களின் கேரக்டர் பேசப்படுகிறது. அவர் இயக்கிய கோமாளி படத்தில் காஜல் அகர்வால் நடித்தார். அவர் ஹீரோவாக அறிமுகமான லவ்டுடேயில் இவானா ஹீரோயின். டிராகன் படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர் ஹீரோயின்களாக வந்தனர். டியூட் படத்தில் மமிதாபைஜூ நடித்தார். இந்த படங்களில் நடிப்பு, பாடல், டான்ஸ் காட்சிகளில் ஹீரோயின்களுக்கு நல்ல பெயர். அதனால் அவரின் அடுத்த படத்தில் நடிக்க பலரும் ஆர்வமாக இருந்தனர்.
இப்போது அந்த வாய்ப்பு மீனாட்சி சவுத்ரி, ஸ்ரீலீலாவுக்கு கிடைத்துள்ளது. விரைவில் வெளியாக உள்ள பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே படத்தில் கிர்த்தி ஷெட்டி ஹீரோயின். இவரின் ஹீரோயின் தேர்வு பல ஹீரோக்களை பொறாமை கொள்ள செய்துள்ளது. ஹீரோயின் தேர்வு விஷயத்தில் பிரதீப் ரங்கநாதன் கில்லாடி. அதுவே படத்தின் வெற்றிக்கு ஒரு காரணமாக இருக்கிறது என்று பாராட்டுகிறார்கள் சக ஹீரோக்கள்.