படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

வெங்கட் பிரபு இயக்கத்தில், பிரேம்ஜி அமரன் இசையமைப்பில், ஜெய், சிவா, ஷாம், சத்யராஜ், ஜெயராம், ரம்யா கிருஷ்ணன், ரெஜினா கசண்ட்ரா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பெத்துராஜ், நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் 'பார்ட்டி'.
மொரிஷியஸ் நாட்டில் அதிகம் படமாக்கப்பட்ட இப்படத்தின் டீசர் 2017ம் ஆண்டு வெளியானது. 2018ல் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 7 வருடங்களாகியும் இப்படம் வெளியாகவில்லை. பல்வேறு காரணங்கள் காரணமாக தள்ளிப் போய்க் கொண்டே வந்தது.
தமிழ் சினிமாவில் தாமதமாக வெளியாகும் படங்கள் வரவேற்பைப் பெறாது என்ற ஒரு சென்டிமென்ட் இருந்தது. அந்த சென்ட்டிமென்ட்டை உடைத்து 12 வருடங்களுக்குப் பிறகு வெளியான 'மத கஜ ராஜா' படம் இந்த வருடப் பொங்கலுக்கு வெளிவந்து வரவேற்பைப் பெற்று 50 கோடி வசூலித்தது.
அதன் பிறகு 'பார்ட்டி' படத்தை இந்த வருடத்திற்குள் வெளியிட வேண்டும் சில முயற்சிகளை எடுத்ததாகச் சொன்னார்கள். இந்தக் காலத்திற்கும் பொருந்தும்படியான கதை என்பதால் படம் எப்போது வந்தாலும் இளைஞர்களைக் கவரும் விதத்தில் இருக்கும் என்கிறார்கள். அதனால், எப்படியாவது 2026 துவக்கத்திலேயே படத்தை வெளியிடலாம் என முயற்சித்து வருகிறார்களாம்.
படத்தில் இருக்கும் பிரச்னைகளை ஒவ்வொன்றாகத் தீர்க்கும் அதிரடியில் படத்தின் தயாரிப்பாளர் டி.சிவா இருப்பதாக கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள். 2025ல் 'மத கஜ ராஜா' ஓடியதைப் போல 2026ல் 'பார்ட்டி' ஓட வாய்ப்புள்ளது என படத்தைப் பார்த்தவர்கள் கூடுதல் தகவலைச் சொல்கிறார்கள்.