பிக்பாஸ் ஜூலிக்கு டும் டும் : நிச்சயதார்த்தம் நடந்தது | பெங்களூருவிலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறக்கும் மகேஷ் பாபு | படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு | மீண்டும் தள்ளிப் போகிறதா லவ் இன்சூரன்ஸ் கம்பெனி? | காட்டேஜ் 'பெட்' சொல்லும் கதை | பெரும் தொகைக்கு விற்கப்பட்ட 'த்ரிஷ்யம் 3' | மதுபாலாவின் ‛சின்ன சின்ன ஆசை' | பிளாஷ்பேக் : இரண்டு காட்சிகளை வாங்கி இரண்டு படங்கள் தயாரித்த ஏவிஎம் |

1984ம் ஆண்டு வெளிவந்த வங்க மொழி படம் 'சத்ரு'. இந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்ய விரும்பியது ஏவிஎம் நிறுவனம். ஆனால் பட தயாரிப்பாளர்கள் ரீமேக் உரிமத்துக்கு மிகப்பெரிய தொகை கேட்டனர். இதனால் ஏவிஎம் நிறுவனம் படத்தில் இருந்து இரண்டு காட்சிகளை மட்டும் பயன்படுத்திக் கொள்ள உரிமம் பெற்றனர்.
அந்த இரண்டு காட்சிகளை வைத்து அதை சுற்றி புதிய திரைக்கதை அமைத்து உருவான படம் தான் 'சங்கர் குரு'. இதே படம் தெலுங்கில் 'சிண்ணாரி தேவதா' என்ற பெயரிலும் உருவானது. சங்கர் குருவை தமிழ் இயக்குனர் எல் ராஜாவும், தெலுங்கு படத்தை ராஜா நாயுடுவும் இயக்கினார்கள்.
தமிழில் அர்ஜுன், சீதா, ரஞ்சனி, பேபி ஷாலினி, சரத்பாபு, மனோரமா உள்ளிட்ட பலர் நடித்தனர். சந்திரபோஸ் தமிழுக்கும், கே சக்கரவர்த்தி தெலுங்குக்கும் இசை அமைத்தனர். இரண்டு மொழிகளிலும் படம் வெற்றி பெற்றது.