பிக்பாஸ் ஜூலிக்கு டும் டும் : நிச்சயதார்த்தம் நடந்தது | பெங்களூருவிலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறக்கும் மகேஷ் பாபு | படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு | மீண்டும் தள்ளிப் போகிறதா லவ் இன்சூரன்ஸ் கம்பெனி? | காட்டேஜ் 'பெட்' சொல்லும் கதை | பெரும் தொகைக்கு விற்கப்பட்ட 'த்ரிஷ்யம் 3' | மதுபாலாவின் ‛சின்ன சின்ன ஆசை' | பிளாஷ்பேக் : இரண்டு காட்சிகளை வாங்கி இரண்டு படங்கள் தயாரித்த ஏவிஎம் |

இந்த காலத்தில் கூட பஸ்களில் பெண் நடத்துனர்கள் இல்லை. ஆனால் 70 ஆண்டுகளுக்கு முன்பு பெண் நடத்துனர்களை மையமாகக் கொண்ட ஒரு படம் தயாரானது அது 'டவுன் பஸ்'. ஏவிஎம் நிறுவனம் தயாரித்த இந்த படத்தை கே சோமு இயக்கினார். இதன் கதையை ஏபி நாகராஜன் எழுதினார்.
அஞ்சலி தேவி, என்.என்.கண்ணப்பா, எம்.என்.ராஜம், வி.கே.ராமசாமி, ஏ.கருணாநிதி, டி.பி.முத்துலட்சுமி, டி.கே.ராமச்சந்திரன், வி.எம்.ஏழுமலை, பி.டி.சம்பந்தம், கே.எஸ்.அங்கமுத்து, தாம்பரம் லலிதா, பி.எஸ்.வெங்கடாசலம், 'கல்லாறும் வெங்கடாசலம்' ஆகியோர் நடித்தனர். கோவையில் செயல்படும் ஒரு தனியார் பஸ் நிறுவனத்தில் சுற்றி இதன் கதை அமைக்கப்பட்டிருந்தது.
அஞ்சலிதேவி பஸ் நடத்துனராக நடித்திருந்தார். என்.என்.கண்ணப்பா என்பவர் ஓட்டுனராக நடித்திருந்தார். இருவரின் காதலை சுற்றி கதை பின்னப்பட்டிருந்தது. பஸ் நிர்வாகியால் வெளியேற்றப்படும் நடத்துனரும், ஓட்டுநரும் இணைந்து ஒரு புதிய பஸ் நிறுவனத்தை எப்படி உருவாக்குகிறார்கள் என்பது திரைக்கதை.
பெண்கள் வீட்டுக்குள் முடங்கிக் கொண்டிருந்த காலத்தில் ஒரு பஸ்ஸில் நடத்துனராக பெண்களே இருந்து பணியாற்றிய காட்சிகள் அப்போது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்தப் படம் முழுக்க முழுக்க கோயமுத்தூர் ரோடுகளில் படமாக்கப்பட்டது. பெரும்பாலான காட்சிகள் பஸ்சுக்கு உள்ளேயே இருந்தது. 70 ஆண்டுகளுக்கு முந்தைய கோயமுத்தூரை பார்க்க வேண்டும் என்றால் இந்தப் படத்தை பார்க்கலாம்
சிட்டுக்குருவி சிட்டுக்குருவி செய்தி தெரியுமா, பொன்னான வாழ்வு மண்ணாகி போகும் போன்று காலத்தால் அழியாத பாடல்கள் படத்தின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்தது.