பெப்காவில் திலீப்பை சேர்க்க முயற்சி ; ராஜினாமா செய்த பெண் டப்பிங் கலைஞர் | தக்க சமயத்தில் உதவி செய்வதில் சூர்யா எம்ஜிஆர் மாதிரி : விநியோகஸ்தர் சக்திவேலன் | அமெரிக்காவில் சிவகார்த்திகேயன், வெங்கட்பிரபு | பிக்பாஸ் ஜூலிக்கு டும் டும் : நிச்சயதார்த்தம் நடந்தது | பெங்களூருவிலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறக்கும் மகேஷ் பாபு | படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு | மீண்டும் தள்ளிப் போகிறதா லவ் இன்சூரன்ஸ் கம்பெனி? | காட்டேஜ் 'பெட்' சொல்லும் கதை |

போயபதி சீனு இயக்கத்தில், பாலகிருஷ்ணா, சம்யுக்தா, ஆதி மற்றும் பலர் நடிப்பில் நேற்று வெளியாக வேண்டிய தெலுங்குத் திரைப்படம் 'அகண்டா 2'. ஈராஸ் நிறுவனத்திற்கு இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தர வேண்டிய பழைய கடன் தொகை பாக்கிக்காக சென்னை உயர்நீதிமன்றம் படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்தது. அதனால், படத்தை அறிவித்தபடி நேற்று வெளியிடமுடியவில்லை.
இந்நிலையில் படத்தைத் தள்ளி வைப்பதாக தயாரிப்பு நிறுவனம் நேற்று அறிவித்தது. அது குறித்து அவர்களது எக்ஸ் தளத்தில், “நாங்கள் 'அகண்டா 2' படத்தை பெரிய திரைகளுக்குக் கொண்டு வர எங்கள் முழு முயற்சியையும் செய்தோம், ஆனால் எங்கள் அயராத முயற்சிகள் இருந்தபோதிலும், சில சமயங்களில், மிகவும் எதிர்பாராத விஷயங்கள் நடக்கின்றன, மற்றும் துரதிர்ஷ்டவசமாக, இது அந்த நேரமாக அமைந்தது.
உலகம் முழுவதும் உள்ள அனைத்து ரசிகர்களுக்கும் மற்றும் சினிமா பிரியர்களுக்கும், படத்தை மிகுந்த எதிர்பார்ப்புடன் ஆவலுடன் காத்திருந்தவர்களுக்கும், நாங்கள் மனமார்ந்த மன்னிப்பு கோருகிறோம். இந்த சவாலான தருணத்தில் எங்களுடன் நின்ற எங்கள் அன்பான 'மக்களின் கடவுள்' பாலகிருஷ்ணா காரு மற்றும் போயபாடி சீனு காரு ஆகியோருக்கு நாங்கள் என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.
அகண்டா 2, எப்போது வந்தாலும் இலக்கைத் தாக்கும்… புதிய தேதியுடன் விரைவில் வருகிறது” என்று அறிவித்துள்ளார்கள்.