படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு | மீண்டும் தள்ளிப் போகிறதா லவ் இன்சூரன்ஸ் கம்பெனி? | காட்டேஜ் 'பெட்' சொல்லும் கதை | பெரும் தொகைக்கு விற்கப்பட்ட 'த்ரிஷ்யம் 3' | மதுபாலாவின் ‛சின்ன சின்ன ஆசை' | பிளாஷ்பேக் : இரண்டு காட்சிகளை வாங்கி இரண்டு படங்கள் தயாரித்த ஏவிஎம் | பிளாஷ்பேக் : அந்த காலத்திலேயே கலக்கிய 'டவுன் பஸ்' | தினமும் எம்ஜிஆரை வேண்டிக் கொண்டு நடித்தேன் : கார்த்தி |

ஏவிஎம் நிறுவனத்தில் ரஜினி நடித்த முதல்படம் ‛முரட்டுக்காளை'. அந்த படம் முதல் ‛சிவாஜி' வரை ஏவிஎம் தயாரிப்பில் பல படங்களில் நடித்துள்ளார். மறைந்த தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, ‛‛பெரிய மனிதர். ஜென்டில்மேன் என்றால் அதற்கு ஒரு எடுத்துக்காட்டு சரவணன் தான். சினிமாவை உயிருக்கு உயிராக நேசிப்பவர். பத்து நிமிடம் பேசினால் அதில் அப்பச்சி... அப்பச்சி... என்று அவருடைய தந்தையை நினைவுபடுத்துவார். என் மீது நிறைய அன்பு வைத்தவர், எனது நல விரும்பி. எனது கஷ்ட காலங்களில் எல்லாம் என்னுடன் துணை நின்றவர். ஏவிஎம்மில் ஒன்பது திரைப்படங்கள் நடித்துள்ளேன், அந்த 9 படமும் ஹிட்.
எண்பதுகளில் முரட்டுக்காளை தமிழகத்தில் பிரம்மாண்டமாக வசூலை குவித்தது. 2000ம் ஆண்டுகளில் ‛சிவாஜி' மிகப்பெரிய படம் பிரமாண்டமான படம் வந்தது. 2020களில் பிரமாண்டமான படம் ஒன்று எடுக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார். அது நடக்கவில்லை, அவருடைய மறைவு எனது மனதை பாதிக்கிறது. ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.