‛இன்று போய் நாளை வா' : கே.பாக்யராஜ் சொன்ன பிளாஷ்பேக் | ராஜமவுலி படத்தில் ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் வெளியீடு | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ராதிகா ஆப்தே படம் | அனந்தா படத்தில் நடந்த அதிசயங்கள் : சத்யசாய்பாபா மகிமை சொன்ன சுரேஷ் கிருஷ்ணா | டப்பிங் பணிகளை துவங்கிய அபிஷன், அனஸ்வரா | தமிழகத்தில் வெளியாகும் ஆஸ்கர் பரிந்துரை படம் | அன்னை இல்லத்தில் இருந்து அடுத்து வாரிசு: ரஜினி ஆசி | டிரெயின் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | கிரிசில்டா குழந்தைக்கு மரபணு சோதனை நடத்த வேண்டும்: கோர்ட்டில் ரங்கராஜ் மனு | பிளாஷ்பேக்: தோல்வி பயத்தில் டைட்டிலை மாற்றிய டி.ஆர்.மகாலிங்கம் |

ஹாலிவுட்டில் 'ஸ்பைடர்மேன்- பிராண்ட் நியூ டே' என்ற படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. டெஸ்டின் டேனியல் இயக்கும் இந்த படத்தில் ஹாலிவுட் நடிகர் டாம் ஹாலண்ட் ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்தின் ஒரு சண்டைக்காட்சி படமாக்கப்பட்டு வந்தபோது ஏற்பட்ட விபத்தில் டாம் ஹாலண்டின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மூளையில் லேசாக அதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக சொல்லி சிகிச்சை அளித்து வருகிறார்களாம். அதனால் டாம் ஹாலண்ட் முழுமையாக குணமடைந்த பிறகே மீண்டும் ஸ்பைடர் மேன் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று அப்படக்குழு அறிவித்துள்ளது.




