தோட்டா தரணிக்கு செவாலியே விருது | மீண்டும் ரஜினியை இயக்குவது போன்று கமலையும் இயக்குவீர்களா? சுந்தர்.சி கொடுத்த பதில் | நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் | ‛இன்று போய் நாளை வா' : கே.பாக்யராஜ் சொன்ன பிளாஷ்பேக் | ராஜமவுலி படத்தில் ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் வெளியீடு | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ராதிகா ஆப்தே படம் | அனந்தா படத்தில் நடந்த அதிசயங்கள் : சத்யசாய்பாபா மகிமை சொன்ன சுரேஷ் கிருஷ்ணா | டப்பிங் பணிகளை துவங்கிய அபிஷன், அனஸ்வரா | தமிழகத்தில் வெளியாகும் ஆஸ்கர் பரிந்துரை படம் | அன்னை இல்லத்தில் இருந்து அடுத்து வாரிசு: ரஜினி ஆசி |

தமிழ் சினிமாவிற்கும் 3டி தொழில்நுட்பத்திற்கும் ராசியே இல்லை. தமிழில் ஒரு சில படங்கள்தான் 3டி தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டது. ஆனால் அனைத்து படங்களும் தோல்வி அடைந்தது. 'மைடியர் குட்டிச்சாத்தான்' பெரும் வெற்றி பெற்றபோது ஏவிஎம் நிறுவனம் ரஜினி நடிப்பில் பெரிய பட்ஜெட்டில் 3டி படம் ஒன்றை தயாரிக்க முடிவு செய்தது. ஆனால் ரஜினி மறுத்து விட்டார். '3டி தொழில் நுட்பத்தில் படம் எடுத்தால் மக்கள் அந்த தொழில்நுட்பத்தைத்தான் ரசிப்பார்கள் படத்தின் கதையை விட்டுவிடுவார்கள்' என்று கூறிவிட்டார்.
தமிழில் தோல்வியை சந்தித்த மற்றுமொரு 3டி படம் 'தங்கமாமா'. சைமன் வி.குரியன் என்ற மலையாள இயக்குனர் இயக்கினார். அருண் என்ற புதுமுகத்துடன் சசிகலா நடித்தார். நம்பியார் உள்ளிட்ட மேலும் சிலர் நடித்தனர். இளையராஜா இசை அமைத்தார். 1985ல் வெளியான இந்த படமும் 'அன்னை பூமி' படம் போன்றே தோல்வி அடைந்தது.
பிற்காலத்தில் வெளிவந்த 'அம்புலி' என்ற 3டி படம்தான் ஓரளவிற்கு வரவேற்பை பெற்றது.




