தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

கடந்த 2011ல் மலையாளத்தில் வரலாற்று பின்னணியில் வெளியான படம் உருமி. பிரித்விராஜ், பிரபுதேவா, ஆர்யா, ஜெனிலியா, வித்யாபாலன், நித்யா மேனன் என மிகப்பெரிய நட்சத்திர கூட்டணியுடன் வெளியான இந்த படத்தை ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கியிருந்தார். பிரபல கதாசிரியர் சங்கர் ராமகிருஷ்ணன் கதை எழுதி இருந்தார். இந்த நிலையில் ஏற்கனவே ஹிட்டான படங்களுக்கு இரண்டாம் பாகம் எடுக்கும் டிரெண்ட்டில் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட் என்பது போல உருமி படத்திற்கும் இரண்டாம் உருவாக இருக்கிறது.
படம் வெளியாகி கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது இந்த தகவலை படத்தின் கதாசிரியரான சங்கர் ராமகிருஷ்ணன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இவ்வளவு காலதாமதம் ஏன் என்றால் முதல் பாகத்திற்கு பிறகான கதையை எழுதுவதற்கு 12 வருடங்கள் நேரம் பிடித்தது என்று அவர் கூறியுள்ளார்
மேலும் இதன் கதை மொத்தம் மூன்று பாகங்களாக இருக்கும்.. தற்போது இரண்டாம் பாகத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகள் முடிவடைந்து விட்டன” என்று கூறியுள்ளார். ஆனால் இந்த இரண்டாம் பாகத்தை இயக்கப் போவது யார்? முதல் பாகத்தில் நடித்த பிரித்விராஜ், பிரபுதேவா மற்றும் முதல் பட கதாநாயகிகள் யார் யார் இந்த படத்தில் இடம் பெறப் போகிறார்கள் என்பதெல்லாம் இன்னும் முடிவாகவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.