இருவரைக் காப்பாற்றி மீட்டெத்த 'மதராஸி' | செப்டம்பர் 12ல் 8 படங்கள் ரிலீஸ் | நடிகைகளை வைத்து பாலியல் தொழில் : பாலிவுட் நடிகை கைது | பிளாஷ்பேக் : இளையராஜாவுக்காக ஒரு வருடம் காத்திருந்த நதியா, பாசில் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர், சிவாஜியின் ஆஸ்தான வசனகர்த்தா | 'பிக்பாஸ்' விஜய் சேதுபதிக்கு 75 கோடி சம்பளம் | அஜித் படத்தின் மீது இளையராஜா வழக்கு | பரவசம் உள்ள பக்தி பாடல், பலரும் ரசித்த திரைப்பாடல்... பாடி பறந்த பூவை செங்குட்டுவன் வாழ்க்கை பயணம் | பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார் | ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ் |
டி.ஏ.மதுரம், சி.டி.ராஜகாந்தம் ஆகியோரை அடுத்து, நகைச்சுவை நடிப்பில் கொடிகட்டிப் பறந்தவர் டி.பி.முத்துலட்சுமி. பின்னாளில் கொடி கட்டிப்பறந்த மனோரமாவிற்கு இவரே முன்னோடி. சுமார் 300 படங்களில் காமெடி மற்றும் குணசித்ர வேடங்களில் நடித்துள்ளார்.
பெற்றோரின் எதிர்ப்பை மீறி சென்னை வந்து சினிமாவில் நடன கலைஞராக பணியாற்றிய தனது மாமாவின் உதவியால் 'சந்திரலேகா' படத்தில் டிரம்ஸ் நடனத்தில் ஆடியதோடு அந்த படத்தில் டி.ஆர்.ராஜகுமாரியின் தாய்க்கு டூப்பாகவும் நடித்தார்.
1950ல் மார்டன் தியேட்டர்ஸ் தயாரித்த 'பொன்முடி' படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்தார். அது முத்துலட்சுமியின் வாழ்க்கையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. அதன்பிறகு காமெடி வேடங்களிலேயே நடித்தார்.
முத்துலட்சுமியின் கேரியரில் முக்கியமான படம் 'நாடோடி மன்னன்'. அதில் அவர் உரிய வயதை கடந்தும் திருணமாகாத பெண்ணாக நடித்தார். இதற்காக அவர் 'புருஷா... புருஷா..'. என்று எப்போதும் பூஜை செய்து கொண்டே இருப்பார்.
படத்தை இயக்கிய எம்ஜிஆர், 'இந்த காட்சியில் சும்மா நடிக்காதே... நிஜமாகவே வேண்டிக்கொள் இந்த படம் வெளிவருவதற்குள் நிஜமாகவே உனக்கு திருமணம் நடக்கும்' என்றார்.
எம்ஜிஆர் சொன்னது போலவே படம் வெளிவதற்கு முன்பே முத்துராமலிங்கம் என்ற சிலம்பாட்ட கலைஞரை திருணம் செய்தார். புதுமண தம்பதிகளை அழைத்து எம்ஜிஆர் விருந்து கொடுத்தார். நாடோடி மன்னன் படத்தையும் தம்பதிகளாக சென்று பார்த்தனர்.