ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
பாலிவுட்டில் பிஸியாகிவிட்ட ராஷ்மிகா மந்தனா, தெலுங்கு மூலம் நடிக்கும் பான் இந்தியா படம் 'தி கேர்ள் பிரண்ட்'. தமிழ் நடிகரும், பாடகி சின்மயின் கணவருமான ராகுல் ரவீந்திரன் இயக்குகிறார். இதில் ராஷ்மிகா ஜோடியாக தீக்ஷித் ஷெட்டி நடிக்கிறார். கவுசிக் மகதா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். கீதா ஆர்ட்ஸ் மற்றும் தீராஜ் மோகிலினேனி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனங்களின் கூட்டணியில் உருவாகி வருகிறது. தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் இப்படத்தினை வெளியிடுகிறார்.
தற்போது ஹேஷம் அப்துல் வாஹாப் இசையமைத்துள்ள . படத்தின் முதல் பாடல் “நதியே” வெளியாகியுள்ளது. தமிழ் பாடல்வரிகளைக் கவிஞர் ராகேந்து மவுலி எழுதியுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ளது.
தற்போது இறுதிக்கட்ட பணிகளில் இருக்கும் படம் விரைவில் வெளிவர இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.