இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் |
மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ரத்னகுமார். அந்தப்படம் ஓரளவுக்கு பேசப்பட அதன் பின்னர் அவரது இயக்கத்தில் அமலாபால் நடிப்பில் ஆடை, சந்தானம் நடிப்பில் குலு குலு ஆகிய படங்கள் வெளிவந்தன. ஆனால் இந்த இரு படங்களும் வெற்றியை பெறவில்லை.
இதற்கிடையே லோகேஷ் கனகராஜின் ‛மாஸ்டர், விக்ரம், லியோ' உள்ளிட்ட படங்களுக்கு கூடுதலாக திரைக்கதை, வசனமும் எழுதினார். தற்போது சர்தார் 2, கராத்தே பாபு ஆகிய படங்களுக்கு கூடுதல் திரைக்கதை, வசனம் எழுதுகிறார்.
இதைத்தொடர்ந்து ரத்னகுமார் அடுத்து ஒரு படத்தை இயக்க போகிறார். இதை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரிக்க போகிறது. இதில் நாயகனாக ‛ரெட்ரோ' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த விது நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.