சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு | ஆண்டனி வர்கீஸ் நடிக்கும் 'காட்டாளன்' பர்ஸ்ட்லுக்கு வெளியீடு | தீபாவளிக்கு வெளியாகும் 'கருப்பு' படத்தின் முதல் பாடல்! | கார்த்தி, விஜய் சேதுபதி போன்ற நடிகர்களால் தான் நல்ல கதை பெரிய படமாக வருகிறது! நலன் குமாரசாமி | சம்பளத்தை குறைத்து கொண்ட விக்ரம்! | ஹ்ரித்திக் ரோஷன் தயாரிப்பில் உருவாகும் புதிய வெப் தொடர் | அர்ஜுன் படத்தின் புதிய அப்டேட்! | 'சீன்'களை திருடும் இயக்குனர் | நான் ‛அப்புக்குட்டி' ஆனது இப்படித்தான் | ரசிகர்கள் 'இன்டலிஜென்ட்': சாய் பிரியா சர்டிபிகேட் |
மலையாள இயக்குனர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் கே.ஜி.எப்., பட புகழ் யஷ் அவரது 19வது படமாக 'டாக்சிக்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதை கே.வி.என் நிறுவனம் தயாரிக்கின்றனர். யஷ்-ன் அக்கா கதாபாத்திரத்தில் நடிகை நயன்தாராவும், கதாநாயகியாக கியாரா அத்வானியும், முக்கிய வேடத்தில் ஹியூமா குரேஷி நடித்து வருகின்றனர்.
கன்னடம் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளில் படமாக்கி வருகின்றனர். பிற மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடுகின்றனர். இப்படம் 2026ம் ஆண்டு மார்ச் 19ம் தேதி அன்று திரைக்கு வருகிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யார் என்பதை இதுவரை அறிவிக்கவில்லை. இந்நிலையில் அனிருத் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் கன்னட திரையுலகில் அனிரூத் இசையமைக்கும் முதல் படம் இதுவாக இருக்கும்.