ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி | 'கஜினி'யும், 'துப்பாக்கி'யும் கலந்தது 'மதராஸி' : ஏ.ஆர்.முருகதாஸ் | தயாரிப்பாளர் சங்கத் தலைரை கைது செய்து ஆஜர்படுத்த கோர்ட் உத்தரவு | பழம்பெரும் நடன இயக்குனர் ஓமணா காலமானர் | பிளாஷ்பேக்: கடும் விமர்சனத்தை சந்தித்த 'கன்னி ராசி' கிளைமாக்ஸ் | பிளாஷ்பேக்: 250 படங்களில் நடித்த இந்திரா தேவி |
பிரபல கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி, நாயகனாக நடித்து, இயக்கிய, காந்தாரா திரைப்படம் 2022ல் திரைக்கு வந்து சூப்பர் ஹிட்டானது. அமோக வெற்றியால் உற்சாகமடைந்த ரிஷப் ஷெட்டி, படத்தின் முன்கதையாக, காந்தாரா சாப்டர் 1 என்ற படத்தை நடித்து, இயக்கி வருகிறார். படத்தில் நடித்த மூன்று நடிகர்கள், ஒன்றரை மாத இடைவெளியில் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இந்த சூழலில், கர்நாடக மாநிலம், ஷிவமொக்கா மாவட்டம், ஹொசநகரின், மாணி அணை பகுதியில் செட் போட்டு, சில நாட்களாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு, அணையில் படகில் சென்று படப்பிடிப்பு நடத்தினர். படகில் ரிஷப் ஷெட்டி உட்பட, 10க்கும் மேற்பட்ட கலைஞர்கள் இருந்தனர். அப்போது காற்றின் வேகம் தாங்காமல், படகு திடீரென கவிழ்ந்தது. கலைஞர்கள் நீரில் விழுந்தனர். ஆழம் குறைவான பகுதி என்பதாலும், அனைவருக்கும் நீச்சல் தெரிந்ததாலும், நீந்தி கரைக்கு வந்தனர்.
'காந்தாரா படக்குழுவினருக்கு, அடுக்கடுக்கான பிரச்னைகள் வர, அப்படத்தில் காட்டப்படும் பஞ்சுருளி என்ற கடவுளின் கோபமே காரணம்' என, பலரும் கூறுகின்றனர். இதற்கிடையே, மாணி அணை பகுதியில், படப்பிடிப்பு நடத்த மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெறாமல் படப் பிடிப்பு நடத்தியுள்ளதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையறிந்த ஷிவமொக்கா கலெக்டர் குருதத் ஹெக்டே, தாசில்தார் ரஷ்மி மூலமாக, படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளார்.