ரஜினிகாந்த், நானும் இணைவது உறுதி, துபாயில் அறிவித்தார் கமல்ஹாசன் | பெற்றோருக்கு தெரியாமல் ஹாரர் படங்கள் பார்ப்பேன்: அனுபமா | துபாயில் நடைபெற்ற சைமா விருது விழாவில் விஜய்யை வாழ்த்திய திரிஷா! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் இரண்டு நாள் வசூல் வெளியானது! | செப்டம்பர் 12ல் நெட்பிளிக்சில் வெளியாகும் சாயாரா! | கென் கருணாஸ் படத்தில் மூன்று நாயகிகள்! | ‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்! | ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை! | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் ‛தோசை கிங்' படத்திற்காக மோகன்லால் உடன் பேச்சுவார்த்தை நடத்தும் தா.சே. ஞானவேல்! |
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா நடித்துள்ள படம் குபேரா. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் உருவாகியுள்ளது. ஜூன் 20ம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
அப்போது தனுஷ் பேசும்போது, ''யாராக இருந்தாலும் உங்கள் சந்தோஷத்தை தேடி வெளியில் போக வேண்டாம். அது உங்களுக்குள்ளேயே இருக்கிறது. ஒரு காலத்தில் ஒருவேளை சாப்பாட்டுக்கு கூட வக்கில்லாமல் இருந்திருக்கிறேன். ஆனால் இப்போது நல்ல நிலையில் இருக்கிறேன். அதே சமயம் எந்த நிலையில் இருந்தாலும் என் சந்தோஷத்தை நான் தவற விட்டதில்லை. காரணம் நான் சந்தோஷத்தை எப்போதுமே வெளியில் தேடியது கிடையாது. எனக்குள்ளே தான் தேடுவேன். சந்தோஷத்தை விட வாழ்க்கையில் முக்கியமானது எதுவும் கிடையாது.
130 நாட்களுக்கு பிறகு மீண்டும் வந்து உள்ளீர்கள். எனக்காக என் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை நினைத்து சந்தோஷமாக உள்ளது. நான் ரொம்ப கொடுத்து வைத்தவன்'' என்று பேசிய தனுஷ், ''இந்த விழா முடிந்ததும் அனைவரும் பத்திரமாக ஊருக்கு போய் சேர வேண்டும். தயவுசெய்து யாராக இருந்தாலும் என்னை பைக்கில் பின் தொடராதீர்கள். நான் அதை ஒரு நாளும் ஊக்குவிக்க மாட்டேன். என்னுடைய சந்தோஷத்தை விட உங்களது பாதுகாப்பு தான் எனக்கு முக்கியம்'' என்று ரசிகர்களை பார்த்து கூறினார் தனுஷ்.