ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் |
முண்டாசுப்பட்டி, ஜெய்பீம், சூரரைப்போற்று உட்பட பல படங்களில் நடித்தவர் சூப்பர் குட் சுப்பிரமணி. இவர் பிரபல பட நிறுவனமான சூப்பர் குட் நிறுவனத்தில் பணியாற்றியதால் இந்த பெயரில் அழைக்கப்பட்டார்.
பல்வேறு படங்களில் போலீசாக, அப்பாவாக பல குணசித்திர வேடங்களில் நடித்தார். பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார். சமீபத்தில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட, புற்றுநோய் பாதிப்பு என தெரிய வந்தது. சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். தனது சிகிச்சைக்கு நிதி தேவை , தனக்கு 4வது கட்ட புற்று நோய் பாதிப்பு என பேட்டி கொடுத்தபோது பல நடிகர்கள், சினிமா கலைஞர்கள் உதவி செய்தனர். புற்று நோய் சிகிச்சை பெற்ற நிலையிலும் கமாண்டோவின் லவ் ஸ்டோரி என்ற படத்துக்கு டப்பிங் பேசினார். பின்னர், வீட்டில் ஓய்வெடுத்த நிலையில், மீண்டும் பாதிப்பு அதிகமாக, ராஜிவ்காந்தி மருத்துவமனையில் அட்மிட் ஆனார். இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டார். புற்றுநோய் பாதிப்பு மூளை உட்பட பல இடங்களுக்கு பரவியதால், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.
தென்னிந்திய நடிகர் சங்கத் துணைத் தலைவர்கள் பூச்சி எஸ்.முருகன், கருணாஸ் இருவரும் உடல்நலக் குறைவால் காலமான நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி உடலுக்கு மலரஞ்சலி செலுத்தி நடிகர் சங்கம் சார்பில் வழங்கப்படும் நிதி உதவியை வழங்கி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். நடிகர் விஜய் முத்து, சங்க மேலாளர் தாமராஜ் உள்ளிட்ட நிர்வாகிகளும் உடன் இருந்தனர். மேலும், சூப்பர் குட் சுப்பிரமணிக்கு, தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி துணைவியாருடன் அஞ்சலி செலுத்தினார்.
மறைந்த சுப்பிரமணிக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர். சென்னையில் நாளை இறுதி சடங்கு நடக்கிறது.