டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை |

உலக அளவில் அதிக அளவிலான சினிமா தியேட்டர்கள் உள்ள நாடுகளில் சீனா, அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகள் உள்ளன. அமெரிக்காவில் தயாராகும் ஹாலிவுட் படங்கள் உலக அளவில் வெளியாகி வசூலைக் குவிக்கின்றன. அதுபோல மற்ற வெளிநாடுகளில் தயாராகும் படங்கள் அமெரிக்காவிலும் திரையிடப்பட்டு அங்கு குறிப்பிடத்தக்க வசூலைப் பெறுகின்றன.
இந்நிலையில் அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் வெளிநாட்டு படங்களுக்கு அமெரிக்காவில் 100 சதவீத வரியை உயர்த்தியுள்ளார். இதனால், இந்தியத் திரைப்படங்கள் அமெரிக்காவில் திரையிடப்படுவதற்கும் சிக்கல் ஏற்படும். தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிப் படங்கள் அமெரிக்காவில் வெளியாகி அங்கு மில்லியன் கணக்கில் வசூலை அள்ளுகின்றன. வரி உயர்வு காரணமாக டிக்கெட் கட்டணங்கள் உயரும். அதற்கு இனி பாதிப்புகள் வரும். தியேட்டர்களுக்குச் சென்று வெளிநாட்டுப் படங்களைப் பார்ப்பதைத் தவிர்க்க ஆரம்பிப்பார்கள். ஓடிடியில் வந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்ற மனநிலை வரும்.
ட்ரூத் சோஷியல் சமூக வலைத் தளத்தில் டொனால்டு டிரம்ப், “மெரிக்காவில் திரைப்படத் துறை மிக வேகமாக மரணத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. மற்ற நாடுகள் நமது திரைப்படத் தயாரிப்பாளர்களையும் ஸ்டுடியோக்களையும் அமெரிக்காவிலிருந்து விலக்க அனைத்து வகையான சலுகைகளையும் வழங்குகின்றன.
ஹாலிவுட் மற்றும் அமெரிக்காவில் உள்ள பல பகுதிகள் பேரழிவிற்கு உள்ளாகி வருகின்றன. இது மற்ற நாடுகளின் ஒருங்கிணைந்த முயற்சியாகும், எனவே, இது ஒரு தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலாகும். இது மற்ற எல்லாவற்றிற்கும் மேலாக, பிரச்சாரம் என்ற பெயரில் செய்தியை அனுப்புவதாகும். எனவே, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு, நமது நாட்டிற்குள் வரும் எந்தவொரு மற்றும் அனைத்து திரைப்படங்களுக்கும் 100% வரி விதிக்கும் செயல்முறையை உடனடியாகத் தொடங்க வணிகத் துறை மற்றும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதிக்கு நான் அதிகாரம் அளிக்கிறேன். அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களை மீண்டும் நாங்கள் விரும்புகிறோம்…,” என்று குறிப்பிட்டுள்ளார்.




