ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது | ரெட்ரோ டிரைலர் : விதவிதமாய் 'குக்' செய்துள்ள கார்த்திக் சுப்பராஜ் | அஜித் பிறந்த நாளில் 'வீரம்' மறு வெளியீடு | உடல்நலக்குறைவு எதனால் ஏற்பட்டது : ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட தகவல் | 'மணி ஹெய்ஸ்ட்' பாதிப்பில் உருவானது கேங்கர்ஸ்: சுந்தர்.சி | பிளாஷ்பேக்: 100 படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்த சுலக்ஷனா | பிளாஷ்பேக்: குருவாயூரப்பனை எழுப்பும் லீலாவின் குரல் |
'உப்பேனா' பட இயக்குனர் புஞ்சிபாபு சனா இயக்கத்தில் நடிகர் ராம்சரண், அவரது 16வது படமாக 'பெத்தி' எனும் படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக ஜான்வி கபூர் நடிக்கின்றார். சிவராஜ் குமார், ஜெகபதி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.
இத்திரைப்படம் அடுத்த ஆண்டு மார்ச் 27ம் தேதி அன்று திரைக்கு வருகிறது. இதன் படப்பிடிப்பு விரைவாக நடைபெற்று வருகிறது. இப்போது இந்த படத்தில் இடம்பெறும் ஒரு சிறப்பு பாடலுக்கு நடனமாட நடிகை காஜல் அகர்வாலுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே காஜல் அகர்வால், ராம் சரணுக்கு ஜோடியாக இரண்டு படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.