தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்து கடந்த வாரத்தில் திரைக்கு வந்த படம் குட் பேட் அக்லி. தற்போது வரை உலகளவில் ரூ.200 கோடி வசூலை நெருங்கி வருகிறது. இதனால் இப்படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த திரைப்படத்தில் பணியாற்றிய பிரபலங்கள் விழாவில் கலந்து கொண்டனர். அந்த வகையில் படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்த அர்ஜுன் தாஸ் விழாவின் மேடையில் பேசியதாவது, "எங்க இருந்து ஆரம்பிப்பது என்பது தெரியவில்லை. இன்றைக்கு சுரேஷ் சந்திரா குழு நிற்கும் இடத்தில் தான் 11 வருஷத்துக்கு முன்னாடி நான் நின்னுட்டு இருப்பேன். இன்றைக்கு இந்த இடத்துல இருக்கேன். அஜித் சார் 2013ல் இருந்து என் மேல நம்பிக்கை வச்சிருக்கிறார். அவர்தான் இந்த படத்திற்காக என்னை ஆதிக்கிடம் சொல்லியுள்ளார். ஜாமி கதாபாத்திரத்தை நல்லபடியாக கையாண்டதற்கு பிரியாவுக்கு நன்றி. நான் அஜித் சாரோட எல்லா படத்தின் போஸ்டரையும் நான் ஷேர் செய்வேன். அப்படி ஒரு நாள் சுரேஷ் சந்திராவிடம் இருந்து எனக்கு கால் பண்ணி, 'ஆதிக் மீட் பண்ணனும்னு சொன்னாரு. போய் பாருங்கனு' சொன்னார் அப்படித்தான் இந்த வாய்ப்பு கிடைச்சது." என இவ்வாறு கூறினார் .