'பராசக்தி' படத்தில் அண்ணாதுரை... கருணாநிதியும் இருக்கிறாரா? | 2வது படத்திலேயே ரஜினியை இயக்கும் வாய்ப்பை பெற்ற சிபி சக்கரவர்த்தி | ரத்தக்கண்ணீருக்கு புதிய அங்கீகாரம் | ஓடிடி டிரெண்டிங்கில் 'பகவந்த் கேசரி' | பொங்கல் போட்டி : டிரைலர்களில் முந்தும் 'ஜனநாயகன்' | எனக்கு யாரும் முழு சம்பளம் தந்ததில்லை: ரச்சிதா மகாலட்சுமி பேச்சு | 'திரெளபதி 2' பாடலில் சின்மயி குரல் நீக்கம்: இயக்குனர் பேட்டி | டிரைலரிலும் போட்டி போடும் 'பராசக்தி' | பிளாஷ்பேக்: தமிழ் படத்தில் நடித்த பிரேம் நசீர் மகன் | பிளாஷ்பேக்: நெகட்டிவ் ஹீரோவாக நடித்த சிவாஜி |

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி வரும் படம் ' எல்.ஐ.கே' (லவ் இன்சூரன்ஸ் கம்பெனி). எஸ்.ஜே.சூர்யா, சீமான், கிர்த்தி ஷெட்டி, கவுரி கிஷன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க, அனிரூத் இசையமைக்கிறார்.
முழுக்க முழுக்க காதல் கலந்த காமெடி கதையில் இப்படம் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக தடைபட்டு தடைபட்டு நடந்து வந்தது. இப்போது ஒரு வழியாக இந்த படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற்றதாக அறிவித்துள்ளனர். மலேசியாவில் நடந்த படப்பிடிப்போடு முடிவடைந்துள்ளது. இந்த படத்தின் கிராபிக்ஸ் பணிகளுக்கு கால அவகாசம் தேவைப்படுவதால் ரிலீஸ் தாமதம் ஆகும் என்கிறார்கள். செப்டம்பரில் படம் வெளியாக வாய்ப்புள்ளது.




