ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி | 'மிஸ்டர்.பாரத்' படப்பிடிப்பு நிறைவு : லோகேஷ் கனகராஜ் நேரில் வாழ்த்து | நிவின் பாலி மீது பணமோசடி வழக்கு | ஒரு வருடத்திற்கு முன்பே விற்றுத் தீர்ந்த டிக்கெட்டுகள்: கிறிஸ்டோபர் நோலன் புதிய சாதனை | பிளாஷ்பேக்: பாலிவுட்டில் வில்லனாக அறிமுகமான தியாகராஜன் | பிளாஷ்பேக் : நாட்டியத்தால் சினிமாவை இழந்த பி.கே.சரஸ்வதி | தலைவன் தலைவி Vs மாரீசன் - அடுத்த வாரப் போட்டி…! |
சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கி உள்ள படம் 'ரெட்ரோ'. பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர் பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடிக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். வருகிற மே ஒன்றாம் தேதி படம் வெளிவருகிறது.
படம் குறித்து கார்த்திக் சுப்பராஜ் கூறியிருப்பதாவது : 'ரெட்ரோ' என்பது ஒரு காலகட்டத்தை குறிக்கும் சொல். இந்தப் படத்தின் கதையும் 1990களில் நடக்கின்ற ஒரு காதல் கதை என்பதால் படத்திற்கு இந்த தலைப்பு வைத்துள்ளோம். இது எனது வழக்கமான கேங்ஸ்டர் படம் அல்ல. அழகான காதல் படம். ஆக்ஷனும் உண்டு, மகிழ்வான தருணங்களும் உண்டு.
படத்தில் சூர்யா பாரிவேல் கண்ணன் கேரக்டரில் நடிக்கிறார். கதை பல இடங்களில் நடப்பதால் பல தோற்றங்களில் அவர் வருகிறார். கோபம், அடிதடி என்று இலக்கு இல்லாமல் வாழும் இளைஞன் வாழ்க்கையில் ஒரு பெண் வரும்போது, அந்தப் பெண்ணின் பொருட்டு அவன் தன்னை மாற்றிக் கொள்வதும் அந்தப் பெண்ணுக்கான ஒரு பிரச்சனை தீர்த்து வைப்பது மாதிரியான கதை. பூஜாவின் கேரக்டர் பெயர் ருக்மணி.
படத்தின் பெரும்பாலான கதை அந்தமானில் நடக்கிறது. தினமும் பல மைல் தூரம் படகில் சென்று ஒரு தனியான தீவில் படம் ஆக்கினோம். ஒரு பகுதி படப்பிடிப்பு வாரணாசியிலும் நடந்துள்ளது. இந்த படம் நிச்சயம் எனது மற்றும் சூர்யாவின் முந்தைய படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக இருக்கும் என்கிறார்.