நடிகர் ரோபோ சங்கர் காலமானார் | காசு கொடுத்து என்னை பற்றி மீம்ஸ் போட சொல்கிறார்கள் : பிரியங்கா மோகன் ஆவேசம் | தள்ளி வைக்கப்பட்ட ரவி மோகனின் தனி ஒருவன் 2 | துஷாரா விஜயன் கதையின் நாயகியாக நடிக்கும் வெப் தொடரில் அப்பாஸ் | ரூ.60 கோடி மோசடி : நடிகைகள் ஏக்தா கபூர், பிபாஷா பாசுவுக்கு சிக்கல் | பணம் தேவைப்பட்டது; கட்டாயத்தால் நடிக்க வந்தேன்: இயக்குனர் அனுராக் காஷ்யப் | இந்த வார ஓடிடி ரிலீஸ்....பட்டியல் சிறுசு தான்....ஆனா மிஸ் பண்ணிடாதீங்க...! | சரோஜாதேவி பெயரில் விருது: கர்நாடக அரசு அறிவிப்பு | திஷா பதானி வீட்டில் துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் என்கவுன்டரில் சுட்டுக் கொலை | இட்லி கடை படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி இதோ |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ படம் மே 1ல் வெளியாகிறது. அடுத்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா அவரது 45வது படத்தில் நடித்து வருகிறார். இதனை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. த்ரிஷா கதாநாயகியாக நடிக்கின்றார். சுவாசிகா, சிவதா , யோகி பாபு, நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்நிலையில் இப்போது மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள நடிகை அனகா ரவி இணைந்துள்ளார். இவர் தற்போது மலையாளத்தில் ஆலப்புழா ஜிம்கானா படத்தில் நடித்துள்ளார். இதற்கான புரொமோசன் நிகழ்ச்சியில் இதனை அவரே அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.