லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், அஜித், த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'குட் பேட் அக்லி'. அடுத்தவாரம் ஏப்ரல் 10ம் தேதி இப்படம் வெளியாக உள்ளது. அஜித்தின் முந்தைய படமான 'விடாமுயற்சி' பெரிய வரவேற்பைப் பெறாமல் போனது. அதனால், இந்தப்படத்தை அஜித் ரசிகர்கள் நிறையவே எதிர்பார்க்கிறார்கள்.
ஆதிக் ரவிச்சந்திரன் கடைசியாக இயக்கிய 'மார்க் ஆண்டனி' பெரிய வெற்றிப் படமாக அமைந்து 100 கோடி வசூலைப் பெற்றது. அதுபோல இந்தப் படத்தை சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் இயக்கியிருப்பார் என அஜித் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இப்படத்திற்காக அடுத்தடுத்து சிங்கிள்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஏதாவது ஒரு அப்டேட்டைக் கொடுத்து வருகிறது படக்குழு. ஒரு முழுமையான கமர்ஷியல் படமாக இப்படம் இருக்கும் என்று தியேட்டர்காரர்களும் எதிர்பார்க்கிறார்கள்.