லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
தமிழ் சினிமாவில் பத்து வருடங்களுக்கு முன்பு 'சுந்தரபாண்டியன், கும்கி, பாண்டிய நாடு, மஞ்சப்பை, ஜிகர்தண்டா, வேதாளம்' என அடுத்தடுத்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தவர் மலையாள நடிகையான லட்சுமி மேனன். விஜய் சேதுபதியுடன் நடித்த 'றெக்க' படத்திற்குப் பின் திடீரென தமிழ் சினிமாவில் காணாமல் போய்விட்டார்.
அதன்பின் அவர் ரீ என்ட்ரி கொடுத்த படம் 'புலிக்குத்தி பாண்டி'. அப்படம் நேரடியாக டிவியில் ஒளிபரப்பானதால் பெரிதும் கவரவில்லை. அடுத்து வந்த 'எஜிபி', 2003ல் வெளிவந்த 'சந்திரமுகி 2' ஆகிய படங்கள் வந்த சுவடு தெரியாமல் போயின.
இந்த வருடத்தில் அவர் நடித்த 'சப்தம்' படம் வெளிவந்தது. படத்திற்கு ஆரம்பத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. தனது ஒவ்வொரு ரீ-என்ட்ரியிலும் கவனிக்கப்படாமலேயே போய் விடுகிறார் லட்சுமி மேனன்.
அவரது அடுத்த தமிழ் வெளியீடாக 'மலை' படம் வெளிவர உள்ளது. யோகிபாபு கதையின் நாயகனாக நடிக்கும் அந்தப் படமாவது லட்சுமி மேனனுக்கு மீண்டும் ஒரு நல்ல என்ட்ரியை கொடுக்கட்டும்.