இந்த வயதில் இப்படி நடிக்கவே விருப்பம் : ஸ்ரீலீலா | கூலி படம் ரிலீஸ் : பெங்களூர் ராமகிருஷ்ணா ஆசிரமத்துக்கு சென்ற ரஜினி | ஷாரூக், சுனில் ஷெட்டி, அமிதாப், பாபி தியோல் வரிசையில் அமீர்கான் | வளைந்து செல்லாதீர்கள், தைரியமாக இருங்கள் : பெண்களுக்கு சுவாசிகா அறிவுரை | சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி சிறுமிக்கு வன்கொடுமை; மலையாள நடிகை கைது! | 'கைதி 2'க்கு முன்பாக ஹீரோவாக நடிக்கப் போகும் லோகேஷ் கனகராஜ் | ‛பாகுபலி தி எபிக்' ஐமேக்ஸ் வடிவிலும் வெளியாகிறது : படக்குழு அறிவிப்பு | ‛கூலி': 3 மில்லியனை நெருங்கும் பிரிமியர் வசூல் | ரசிகர்களுடன் ‛கூலி' படம் பார்த்த திரைப்பிரபலங்கள் | ‛குட் டே' முதல் ‛ஜேஎஸ்கே' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? |
நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‛கூலி, ஜெயிலர் 2' படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், கடலோர கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த வரும் சிஐஎஸ்ப் வீரர்களுக்கு வரவேற்பு அளிக்க வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் கையெடுத்து கும்பிட்டு முக்கிய வீடியோ வெளியிட்டுள்ளார்.
இது குறித்து கடலோர மக்களுக்காக ரஜினி வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: அனைவருக்கும் வணக்கம், நம்ம நாடு மற்றும் மக்களின் நற்பெயர் அதனை கெடுக்க பயங்கரவாதிகள் கடல் வழியாக நாட்டிற்குள் புகுந்து, கோர சம்பவங்கள் செய்வார்கள். அதற்கு உதாரணம் மும்பையில் 26/11ல் நடந்த கோர சம்பவம். கிட்டத்தட்ட 175 பேரின் உயிரை வாங்கியிருச்சு. இந்த கடலோர பகுதியில் வாழும் மக்கள் விழிப்புணர்வோடு இருந்து, சந்தேகத்திற்குரிய மக்கள் யாராவது நடமாடினால், அருகில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷனிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
ஒரு விழிப்புணர்ச்சி ஏற்படுத்த, சி.ஐ.எஸ்.எப், வீரர்கள் 100 பேர் கிட்டத்தட்ட 7 ஆயிரம் கிலோ மீட்டர் மேற்குவங்கத்தில் இருந்து கன்னியாகுமரி வரை சைக்கிளில் பயணம் செய்வார்கள். அவர்கள் உங்கள் ஏரியாவிற்கு வரும் போது அவர்களை வரவேற்று, முடிந்தால் அவங்களுடன் கொஞ்சம் தூரம் போய், உற்சாகப்படுத்துங்க. நன்றி. வாழ்க தமிழ் மக்கள், வளர்க தமிழ் மக்கள். ஜெய்ஹிந்த். இவ்வாறு அவர் கூறினார்.