ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
5 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்து வெற்றி பெற்ற படம் காளிதாஸ். அறிமுக இயக்குனர் ஸ்ரீசெந்தில் இயக்கினார். பரத், ஆன் ஷீத்தல், சுரேஷ் மேனன், ஆதவ் கண்ணதாசன் உள்பட பலர் நடித்திருந்தார்கள். லீப்பிங் ஹார்ஸ் என்டர்டெயின்மென்ட், இன்க்ரெடிபிள் புரொடக்ஷன்ஸ், டினா ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருந்தது.
போலீஸ் அதிகாரியான காளிதாஸ்(பரத்) ஒரு பெண்ணின் கொலை பற்றி துப்பறியும்போது அந்த கொலை குற்றவாளி தன் மனைவி என்று கண்டுபிடிக்கிறார். ஆனால் மனைவி கற்பனையான ஒருவரை உருவாக்கிக் கொண்டு அவர் தன்னை கொல்ல வருவதாக நம்பும் மனநிலை கொண்டவராக இருக்கிறார். இந்த இடியாப்ப சிக்கலுக்கு தீர்வு காணும் வித்தியாசமான கிரைம் திரில்லாரா இந்த படம் அமைந்திருந்தது.
தற்போது இதன் இரண்டாம் பாகம் தயராகிறது. போலீஸ் அதிகாரி காளிதாஸ்(பரத்) இன்னொரு சிக்கலான வழக்கை துப்பறிவதுதான் இந்த படத்தின் கதை என்கிறார்கள். இந்த படத்தை முதல் பாகத்தை இயக்கிய ஸ்ரீகணேஷ் இயக்குகிறார். சாம் சி.எஸ் இசை அமைக்கிறார், சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்கிறார். அரவிந்த் ஆனந்த் திரைக்கதை எழுதுகிறார். ஸ்கை பிக்சர்ஸ் சார்பில் யோகேஸ்வரனும், பைவ் ஸ்டார் சார்பில் கே.செந்திலும் தயாரிக்கிறார்கள். பரத்துடன் அஜய் கார்த்திக் நடிக்கிறார். படப்பிடிப்பு துவங்கி நடந்து வருகிறது.