சிம்பு 49வது படத்தில் இணைந்த சந்தானம் | ஷங்கர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிக்க இருந்த அந்நியன் ஹிந்தி ரீமேக் டிராப்பா... | ஸ்ரீ லீலாவை பின்தொடரும் 11 மில்லியன் பேர் : இரண்டே மாதங்களில் 2 மில்லியன் அதிகரிப்பு | சிகரெட் பிடிக்கும் காட்சியில் நடித்த ஜோதிகா | ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ஜூனியர் என்டிஆர் படம் | அசோக் செல்வனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ்? | விமல் நடிப்பில் 'ஓம் காளி ஜெய் காளி' | பிரபாஸிற்கு ஜோடியாகும் பாக்யஸ்ரீ போஸ் | மோகன்லாலுக்கு வில்லனாக நடிக்க மறுத்த ஜீவா | ஆர்.டி.எக்ஸ் இயக்குனருடன் இணைந்த துல்கர் சல்மான் |
தங்கலான், அமரன், வணங்கான் படங்களுக்குப் பிறகு தற்போது தனுஷ் இயக்கி திரைக்கு வந்திருக்கும் ‛நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' மற்றும் தற்போது அவர் இயக்கி நடித்து வரும் ‛இட்லி கடை' படத்திற்கும் இசையமைத்துள்ளார் ஜி.வி .பிரகாஷ் குமார். அதோடு அவர் ஹீரோவாக நடித்துள்ள ‛கிங்ஸ்டன்' என்ற படம் மார்ச் 7ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படி நடிப்பு, இசை என இரட்டை குதிரை சவாரி செய்து வரும் ஜி.வி.பிரகாஷ் குமார் சென்னையில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது, தனுஷ் நடிப்புடன் அவரை ஒப்பிட்டு ஒரு கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.
அதற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் பதிலளிக்கையில், ‛‛சினிமாவில் குழந்தை பாடகராக தோன்றி அதன்பிறகு இசையமைப்பாளராகி ஒரு நிலையான இடத்தை பிடிப்பதற்கு நிறைய கஷ்டங்களை சந்தித்தேன். அதேபோல் தொடர்ந்து படங்களில் நடித்தும் வருகிறேன். ஆனால் தனுஷ் ஒரு சிறந்த நடிகர். அவரது நடிப்புக்கு என்னால் ஈடு கொடுத்து நடிக்க முடியாது. அந்த அளவுக்கு அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர் தனுஷ்'' என்று கூறியிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ் குமார்.