சிம்பு 49வது படத்தில் இணைந்த சந்தானம் | ஷங்கர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிக்க இருந்த அந்நியன் ஹிந்தி ரீமேக் டிராப்பா... | ஸ்ரீ லீலாவை பின்தொடரும் 11 மில்லியன் பேர் : இரண்டே மாதங்களில் 2 மில்லியன் அதிகரிப்பு | சிகரெட் பிடிக்கும் காட்சியில் நடித்த ஜோதிகா | ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ஜூனியர் என்டிஆர் படம் | அசோக் செல்வனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ்? | விமல் நடிப்பில் 'ஓம் காளி ஜெய் காளி' | பிரபாஸிற்கு ஜோடியாகும் பாக்யஸ்ரீ போஸ் | மோகன்லாலுக்கு வில்லனாக நடிக்க மறுத்த ஜீவா | ஆர்.டி.எக்ஸ் இயக்குனருடன் இணைந்த துல்கர் சல்மான் |
நித்தம் ஒரு வானம் படத்தில் இணை இயக்குனராக பணியாற்றியவர் சண்முக பிரியன். இவர் புதிதாக நடிகர் விக்ரம் பிரபுவை வைத்து 'லவ் மேரேஜ்' எனும் படத்தை இயக்கி உள்ளார். முக்கிய வேடத்தில் கவுதம் மேனன் நடிக்க, இவர்களுடன் சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜ ராஜ், முருகானந்தம், கோடாங்கி வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சத்யராஜ் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.
இப்படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' கிராம பின்னணியில் அனைவரது மனதையும் கவரும் வகையில் குடும்ப பொழுதுபோக்கு படமாக 'லவ் மேரேஜ்' தயாராகிறது. தாமதமான திருமணம் என்ற சூழலில் போராடும் ஆண்களின் நகைச்சுவையான மற்றும் பார்வையாளர்களுடன் எளிதில் தொடர்பு கொள்ளக்கூடிய சம்பவங்களை மையமாகக் கொண்டு படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது'' என்றார்.
படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது படத்தின் முதல் பார்வையை வெளியிட்டுள்ளனர். இந்த திரைப்படம் எதிர்வரும் கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது.