முதல் நாளில் ரூ.27 கோடி வசூலித்த 'மிராய்' | 'கங்குவா' கதாநாயகி வீட்டில் துப்பாக்கிச் சூடு : இது ‛டிரைலர்' என எச்சரிக்கை | கர்நாடக இசைப்பாடகி எஸ்.ஜே.ஜனனியின் 3 டாட் ரெக்கார்டிங் ஸ்டுடியோஸ் திறப்பு : கலைஞர்கள் பங்கேற்பு | டிக்கெட் கட்டணங்களை அதிரடியாகக் குறைத்த கர்நாடகா அரசு | சமூக வலைத்தளங்களை விட்டு வெளியேறிய ஐஸ்வர்ய லட்சுமி | பிரச்சனை முடிந்து திரைக்கு வந்தது 'தணல்' | ‛ஜனநாயகன்' படத்திற்கு செக் வைக்க வரும் ‛பராசக்தி' | கமல் படத்தில் இணைந்த பிரபல மலையாள எழுத்தாளர் | வட சென்னை பெண்ணாக சாய் பல்லவி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் காஞ்சனா 4 |
சென்னை மாநகரின் பிரபலமான தியேட்டர்களில் ஒன்று அசோக் நகர் பகுதியில், அசோக் பில்லர் அருகாமையில் அமைந்து இருந்த உதயம் தியேட்டர் காம்ப்ளக்ஸ். 1983ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த தியேட்டர் உதயம், சூரியன், சந்திரன் என மூன்று தியேட்டர்களுடன் வெற்றிகரமாக நடந்து, பின்னர் மினி உதயம் என நான்காவது தியேட்டரும் உருவாக்கப்பட்டது.
ஏராளமான வெற்றி படங்களை தாங்கி நின்று மக்களை ரசிக்க வைத்த இந்த தியேட்டர் கடந்த அக்டோபர் மாதமே மூடப்படுவதாக செய்திகள் வெளியானது. அதன் பிறகு சில மாதங்கள் படங்கள் திரையிடப்பட்டு ஜனவரியில் படங்கள் திரையிடுவதை நிறுத்திக் கொண்டது.
இந்நிலையில் இந்த தியேட்டரை இடிக்கும் பணி நடந்து வந்த நிலையில் தற்போது ஒட்டுமொத்தமாக தியேட்டர் தரைமட்டமாக இடிக்கப்பட்டு விட்டது. இந்த இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் வேலைகள் அடுத்து ஆரம்பமாக உள்ளது.
சென்னை மாநகரின் முக்கியமான பகுதியில் அமைந்த பெருமை வாய்ந்த மல்டிபிளக்ஸ் தியேட்டராக இருந்த உதயம் இப்போது தரைமட்டமாக காட்சி அளிப்பது சினிமா ரசிகர்கள் மத்தியிலும், திரையுலகனிர் மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.