துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை | அமெரிக்காவிலிருந்து புதிய கதையுடன் சென்னை திரும்பிய கமல் | 100 கோடியைக் கடந்த 'ஸ்கை போர்ஸ்' | 'என் இனிய பொன் நிலாவே' பாடல் : இளையராஜாவுக்கு உரிமையில்லை என நீதிமன்றம் தீர்ப்பு | 'பராசக்தி' தலைப்பு தொடரும் சிக்கல் ? | பொங்கல் படங்களில் தாக்குப் பிடிக்கும் 'மத கஜ ராஜா' |
கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி போன்ற வித்தியாசமான படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தந்து வியக்க வைத்தவர் இயக்குனர் ராம். இவரது இயக்கத்தில் ' ஏழு கடல் ஏழு மலை' படம் ரிலீஸூக்கு தயாராக உள்ளது.
இது அல்லாமல் நடிகர் மிரிச்சி சிவாவை வைத்து ராம் புதிய படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வெறும் 45 நாட்களில் படமாக்கியுள்ளனர். இதில் சிவா நடுத்தர வயது தந்தை கதாபாத்திரத்தில் வித்தியாசமாக நடித்துள்ளார் என கூறப்படுகிறது. இவருடன் இணைந்து க்ரேஷ் ஆண்டனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்த படத்திற்கு ' பறந்து போ' எனும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த திரைப்படம் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ‛ரோட்டர்டேம்' திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளது.