நிர்வாகிகள் பதவி காலம் நீட்டிப்பு ஏன்? கோர்ட்டில் விஷால் விளக்கம் | ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | தமிழகம் எனக்கு உறுதுணையாக உள்ளது : நன்றி சொன்ன கமல் | விஜய்சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தேவுக்கு பதிலாக நிவேதா தாமஸ்? | விக்ரம் சுகுமாரன் மறைவுக்குப் பிறகு ஓடிடியில் வெளியான மதயானை கூட்டம் | தாரே ஜமீன் பர் படத்தை யு-டியூப்பில் இலவசமாக வெளியிடும் அமீர்கான் | அறிவுரை சொல்பவர்கள் முதலில் தாங்கள் ஒழுங்கானவர்களா? : நடிகர் விநாயகன் கிண்டல் | அவசர அவசரமாக முடிக்கப்பட்ட பாலியல் வழக்குகள் ; அரசுக்கு எதிராக பார்வதி காட்டம் | ஹரி ஹர வீர மல்லு படம் தள்ளிப்போகிறதா? | ரேவதி இயக்கத்தில் பிரியாமணியின் ‛குட் ஒயிப்' |
தெலுங்கில் பாலகிருஷ்ணா, பாபி தியோல், ஊர்வசி ரவுட்டாலா, ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் 'டாக்கு மகாராஜ்'. இந்த படம் ஜனவரி 12ம் தேதியான நேற்று தெலுங்கில் வெளியாகி உள்ளது. பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றுள்ள இந்த படம் திட்டமிட்டபடி தமிழ், ஹிந்தியில் நேற்று வெளியாகவில்லை.
இது குறித்து அப்படத்தின் தயாரிப்பாளர் நாக வம்சி வெளியிட்டுள்ள செய்தியில், 'டாக்கு மகாராஜ் படத்தின் தமிழ், ஹிந்தி பதிப்புகளின் டெக்னிக்கல் பணிகள் தாமதமாகி வந்ததால் ஜனவரி 12ம் தேதி வெளியாகவில்லை. என்றாலும் தற்போது பணிகள் முடிவடைந்து தணிக்கை குழுவின் சான்றிதழும் பெற்று விட்டோம். அதனால் ஜனவரி 17ம் தேதி இந்த படம் தமிழ், ஹிந்தியில் வெளியாக உள்ளது' என்று தெரிவித்திருக்கிறார். தமன் இசையமைத்துள்ள இந்த டாக்கு மகாராஜ் படத்தை பாபி கொல்லி என்பவர் இயக்கியுள்ளார்.